பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊடலும் ஆடலும் 11蜜

சூடிஞர் கங்கை யாளைச்

சூடிய துழனி கேட்டுஅங்கு ஊடினுள் நங்கை யாளும்;

ஊடலை ஒழிக்க வேண்டிப் பாடிஞர் சாம வேதம்:

பாடிய பாணி யாலே ஆடினர், கெடில வேலி

அதிகைவி ரட்ட ேைர.

  • கெடில நதியை ஒரு பக்க எல்லையாகக் கொண்ட திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளிய சிவபெருமானுர், கங்கா தேவியைத் தம் சடையில் அணிந்தார்; அப்படி அணிந்த போது அம்பிகை ஊடல் கொண்டாள்; அந்த ஊடலைப் போக்குவதை விரும்பி, சாம வேதம் பாடினர்; அப் படிப் பாடும்போது தாளம் போட்டுப் பாட, அந்தத் தாளத்துக் கேற்ப நடனம் ஆடினர். (அம்பிகையின் ஊடல் தீர்ந்தது.) "

(சூடி ளுர்-தலையில் அணிந்தார். ஆரவாரத்தோடு வந்: தாலும் இறைவன் அவளுடைய முழக்கத்தை அடக்கி ஒரு மலரைத் தலையில் அணிவதுபோல அணிந்தார். துழனி-ஓசை. அங்கு-அப்பொழுது. நங்கையாள்-உமாதேவி, கங்கையாள் கூடினுள்; அது கண்டு நங்கையாள் ஊடினுள்; நங்கையாளும்: உம்மை, அசை. பாணியால்-தாளத்துக்கு ஏற்றபடி, கெடிலம்கெடிலம் என்னும் ஆறு. வேலி-எல்லை. அதிகை வீரட்டனர்: எழுவாய். ஏகாரங்கள், அசை.)

இ நான்காம் திருமுறையில் 27ஆம் திருப்பதிகத்தில் வரும். ரண்டாவது பாட்டு இது. - - - -