பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. ஐவரோடும் வைத்தார்

தம்மை ஆட்கொண்ட திருவதிகை வீரட்டப் பெருமானைப் பலபடியாகப் பாடி மகிழ்பவர் அப்பர் சுவாமிகள், அந்தப் பெருமான மனத்தால் தியானித்தும் வாக்கினல் பரவிப் பாடி யும் உடம்பால் வணங்கியும் தொண்டு பூண்டவர்; இறைவ ருடைய இயல்பை யெல்லாம் உணர்ந்தவர். அவர் பாடும் ஒரு பாடலை இப்போது பார்ப்போம்.

எம்பெருமானப் பலகால் தரிசித்துத் தரிசித்து வழிபடு பவர்கள் அவரை அகத்துள்ளே கண்டு மகிழ்வார்கள். நாம் ஒரு முறை ஒரு பொருளைக் கண்டதோடு நின்று விட்டால் அதை மீண்டும் நினைக்கும்போது அது நம் மனத்தில் தட்டுப் படாது. பல காலம் பார்த்துப் பழகும் நம் மனைவியின் வடிவத்தைக் கூடத் தனியே இருந்து நினைத்தால் அந்த வடிவம் முற்றும் தெளிவாக நம் மனத்தில் தோன்றுவதில்லை. அன்பர்கள் இறைவரைப் பலகால் தரிசனம் செய்து உண் முகத்தே அவருடைய காட்சியைக் காண முயல்வார்கள். நாளடைவில் அந்த வடிவத்தை அகத்திலே காணும் நிலை வரும.

இவ்வாறு பழகாவிட்டால் பெருமானை அகத்தில் காணுவ தரிது. பலகாலும் தரிசித்தவர்களுக்கே உண் முக தரிசனம் அரிது என்ருல் அவரைக் காணுமலே பொழுது போக்குவார் அவரை எப்படி நினைக்க முடியும்? அத்தகைய இயல்புடைய வர்கள் கருத்தில் அவர் நிற்கமாட்டார். - - - -

இறைவரைத் தரிசித்துப் பழகின லும் மனத்தில் பல பல எண்ணங்களை உடையவர்கள் அவரை உண்முகத்தே காண

முடியாது. உள்ளத்தை மாசு மறுவற்றதாக்கித் திருத்திய

வர்கள் அங்கே அவரைக் காண முடியும். மனம் பலபடியாகச்