பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#20 அப்பர் தேவார அமுது

எங்கும் மலரும் மணமும் நிரம்பிப் பொலிகிறது. கடற்கரையை அடுத்துள்ளமையால் அங்கங்கே நெய்தல் மலர்கள் மலர்ந்து மணம் கமழ்கின்றன.

கெய்தலே கமழும் நீர்மை.

நிலவளம் பெற்றிருந்தால் அங்கே வயல்கள் மிகுதியாக இருக்கும். நீர் வளத்தால் உழவர்கள் உழது பயிரிடுவார்கள். சேறு நிரம்பிய வயல்களிலிருந்துதானே நமக்குச் சோறு விளை கிறது? இந்தத் திருத்தலத்தில் வயலுக்குக் குறைவில்லை. அங்கே சேற்றுக்குக் குறைவில்லை. அதனுல் சோற்றுக்கும் குறைவில்லை.

சேறுடைய வயல்களில் தாமரை மலர்கள் மலர்த்திருக் கின்றன. சேற்றிலே வளர்ந்து மலர்வதனல் தாமரைக்குப் பங்கஜம் என்ற பெயர் வந்தது. இந்தத் திருத்தலத்தில் வயல் களின் ஒரக் கால்களில் தாமரைமலர்கள் வரிசை வரிசையாகப் பூத்திருக்கின்றன. இறைவருடைய அணிமையைப் பெற்ற அன்பர்களின் முகம் போலப் பொலிகின்றன. அவை.

இத்தகைய கமலங்களைப் பெற்ற வளவயல்களும், பூம் பொய்கைகளும் இந்தத் தலத்தைச் சுற்றி எல்லை காட்டிக் கொண்டு விளங்குகின்றன.

சேறுடைக் கமல வேலித்

திருச்செம்பொன் பள்ளி யாரே!

நெய்தல் நிலத்துக்குரியது நெய்தல் மலர். மருத நிலத்துக் குரியது தாமரை. இங்கே இரண்டு வகை நிலங்களும் இருப் பதளுல் நெய்தலையும் தாமரையையும் ஒருங்கே பார்க்கிருேம். நெய்தல் மலர் சிறப்பான மலர் அன்று. மலர்களுக்குள் தாமரையே சிறந்தது. “பூவினுக் கருங்கலம் .ெ ட | ங் கு தாமரை” என்று அப்பரே பாடுவரர். ஆனல் இங்கே இறைவர் இடத்தில் நெய்தலும் மலர்ந்து விளக்கம் பெற்று நிற்கிறது. தாமரையும் மலர்ந்து பொலிவுற நிற்கிறது. இறைவரைச் சார்ந்தால் இழிந்தவர்களாக இருந்தவர்களும் உயர்ந்தவர்