பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{34 அப்பர் தேவார அமுது பெருமான். அவர்கள் மேலும் மேலும் பாடும்படி அவர்களுக்கு வேண்டிய ஆற்றலைக் கொடுப்பார். i.

பத்தர்கள் பயில வைத்தார். திருமால் சிவனடியார்களில் ஒருவர்; மகாபலியினிடம் வாமனராகச் சென்று மூன்றடி மண் வேண்டினர்; அவன் கொடுக்க இசைந்தவுடன் வாமனராக இருந்த வடிவத்தை மாற்றிக் கொண்டு நீண்டுயர்ந்த திரிவிக்கிரமாவதாரத்தை எடுத்தார்; பிறகு மண்ணினைக் காலால் தாவி அளந்தார். அவ்வாறு செய்து மாவலியின் கொடுமையை அழிக்கும்படி யாகத் திருமாலுக்கு ஆற்றலை அளித்தவர் சிவபெருமானே.

மண்ணினத் தாவ நீண்ட

மாலினுக்கு அருளும் வைத்தார்.

வேறு யாருக்கும் இல்லாத அங்க அடையாளங்களை உடை யவர் அவர். மற்றவர்கள் யாவரும் இரண்டு கண்களோடு இருக்க, அவர் தம் நெற்றியில் ஞானக் கண்ணை உடையவராக விளங்குகிரு.ர்.

கண்ணினே நெற்றி வைத்தார்.

திருக்கழிப்பாலே என்னும் தலத்துக்குச் சென்று வழிபட்ட போது இந்த எண்ணங்களெல்லாம் அப்பர் சுவாமிகளுக்குத் தோன்றின. திருக்கழிப்பாலை கடற்கரையில் உள்ள தலம். அந்தக் கடற்கரையில் எழுந்தருளியுள்ளவராகிய சிவபெரு மான் இவற்றைச் செய்தருளினர். - v_ ~

கழிப்பாலைச் சேர்ப்புளுரே. - -

இறைவருடைய திருவருளினல் தேவர்கள் வாழ்கிருர்கள். அதனுல் அவர்கள் இறைவரை விரும்பி வழிபடுகிருர்கள். உலகத்திலுள்ளவர்கள் வேள்விகளைச் செய்து தேவர்களுக்கு உணவு வழங்கும்படி ஒரு நியதியை அவரே வகுத்திருக்கிருர், பண்ணும் பாட்டும் உலகிலுள்ளார் பாடும்படி வைத்துப் பக்தர்