பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவர் அமைத்துள்ள நியதி #25 கள் தம் புகழைப் பண்ணுேடு பாடும் படியான நியதியையும் அவர் அமைத்திருக்கிருச். தேவர்களுக்கு அருள்வது போலத் திருமாலுக்கும் அருள்புரிந்து அவரால் சில தீயவர்கள் அழியும் படியாகச் செய்திருக்கிருர். ஞானக் கண் படைத்த அப்பெரு மான் இன்னுருக்கு இன்னபடி அருள் புரிந்து செயல்பட வைக்க வேண்டும் என்று திருவுள்ளங்கொண்டு அவ்வாறே எல்லாவற்றையும் நிகழ்த்துகிருர். இந்தக் கருத்துக்களை அப்பர் சுவாமிகள் திருப்பாட்டுத் தெரிவிக்கிறது.

விண்ணினே விரும்ப வைத்தார்,

வேள்வியை வேட்க வைத்தார், பண்ணினைப் பாட வைத்தார்,

பத்தர்கள் பயில் வைத்தார். மண்ணினைத் தாவ நீண்ட

மாலினுக்கு அருளும் வைத்தார், கண்ணினை கெற்றி வைத்தார், கழிப்பாலைச் சேர்ப்ப ளுரே. *திருக்கழிப்பாலைக் கடற்கரையில் திருக் கோயில் கொண்டு எழுத்தருளியுள்ள இறைவர், தேவலோகத்திலுள்ளவர்கள் தம்மை விரும்பி வேண்டியவற்றைப் பெறும்படி வைத்தார்: உலகத்திலுள்ள அந்தணர்கள் தேவர்களுக்கு அவியுணவு வழங்கி வேள்வியைச் செய்யும்படி வைத்தார்; பல வகையான பண்களைப் பாடும் படியாகத் தோற்றிவைத்தார்; அந்தப் பாடல்களைப் பக்தர்கள் பலகாலும் பாடும்படி வைத்தார்; உலகைத் தாவி அளப்பதற்காக நீண்ட வடிவம் எடுத்த திரு மாலுக்கு அருளை வைத்தார்; தம்முடைய நெற்றியிலே ஒரு கண்ணை வைத்தார்."

தேவர்கள், அந்தணர்கள், பக்தர்கள், திருமால் ஆகியவர் களுக்கு இன்ன இன்னபடி செய்க என்ற நியதியை இறைவர் தம் ஆணையால் அமைத்து வைத்ததைச் சொல்வது இந்தப் பாட்டு. -