பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணிடை மணியர் 129,

இறந்து போல்ை என் சொத்தைப் பற்றி என் மக்களும் பிறரும் சண்டை போட்டுக்கொள்வார்கள். அவ்வாறு செய் யாமல் அவர்களுக்கு ஏற்ற பங்குகள் இன்னவை என்று சொல்லிவிட்டு வருகிறேன். அதுவரையில் சிறிது நேரம் பொறுத்திரு” என்ருல் அவன் இருப்பாளு? நரம் உயிர் விடும் காலம் இன்னதென்று நமக்குத் தெரியாது. அவனிடந்தான் அந்தக் கணக்கு இருக்கிறது. அந்தக் காலக் கணக்கில் கண நேரமும் அவன் தவறமாட்டான். பலத்தாலோ பணத்தாலோ அறிவாலோ பெரியவர் என்று தாட்சணியம் பார்க்கமாட்டான். "உனக்குக் கோடி பொன் தருகிறேன். சற்றுப் பொறுத்திரு' என்ருல் பொறுத்திருக்கமாட்டான்.

'கோடி பொன் அளிப்பன்; இன்றே கோடிர்: ஒர் மாத்தி ரைக்குள் ஊடிய கிளைக்குஓர் வார்த்தை

உரைத்துஅடை குவன்என் ருலும் தேடிய கால தூதர்

சிமிழ்த்தல் விட்டு அடைவ ரேசொல்’’ என்பது குசேலோபாக்கியானம்,

வானத்தில் யமலோகத்தில் வாழும் எமன், அவரவர்க்கு. அடைத்த வாழ்நாள் முடிந்ததை அறிந்து தன் கடமையை ஆற்ற வருவான். எதற்கும் அஞ்சாமல் எதற்கும் தடைப்படா மல் தன் கடமையை ஆற்றுவதால் அவனுக்குத் தருமராசன் என்று பெயர் வந்தது, அவன் வந்து நம் உயிரை எடுத்துச் செல்ல விரும்பினால் அவனை யாராலும் விலக்க முடியாது. “மாற்றரும் கூற்றம்’ என்று தொல்காப்பியம் சொல்கிறது.

விண்ணிடைத் தரும ராசன்

வேண்டினல் விலக்குவார் ஆர்?

இப்படி யமனுல் உயிர் கொண்டு போகப் பெற்ருல் அது யமலோகத்தில் நின்று விடுவதன்று. சுவர்க்க நரகங்களில்