பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணிடை மணியர் #31

தமக்கு அருள் தந்து ஆட்கொண்ட எம்பெருமானை இவ்வாறு பாடுகிருர் அப்பர். திருக்கடவூர், காலனை இறைவன் சங்காரம் செய்ததை நினைப்பூட்டும் தலம்: அட்ட வீரட்டங்க ஞள் அது ஒன்று, இறைவன் செய்த வீரச் செயல்களுள் ஒன் ருகிய கால சங்கார க்ஷேத்திரம் அது என்று புராணம் சொல் கிறது.

அந்தத் தலத்தை அடைந்தவுடன் யமனுடைய நினைவு அப்பர் சுவாமிகளுக்கு வருகிறது. அவனுடைய கொடுமையி னின்றும் நீங்கி இன்ப வாழ்வடைவதற்கு இறைவரையே கண் ணினுள் மணியாகக் கொண்டு வாழ்கிருர்கள் பக்தர்கள் என்ற எண்ணம் தோன்றியது. அப்பரே அப்படி வாழ்கிறவர். அதைப் படர்க்கையிலே வைத்துச் சொல்கிருர்,

மண்ணிடைக் குரம்பை தன்னை

மதித்துர்ே மையல் எய்தில் விண்ணிடைத் தரும ராசன்

வேண்டினுல் விலக்கு வார்.ஆர்? பண்ணிடைச் சுவைகள் பாடி

ஆடிடும் பத்தர்க்கு என்றும் கண்ணிடை மணியர் போலும்

கடவூர்வீ ரட்ட குரே.

  • உலக மக்களே, இந்த உலகத்தில் நாம் வாழும் குடிசை போன்ற உடம்பைப் பெரிதாக மதித்து நீங்கள் இதன்பால் மயக்கம் அடைந்து நின்ருல், வானிலிருந்து யமராசன் வந்து நம் உயிரை எடுத்துச் செல்ல விரும்பினுல் அவனே விலக்கும் ஆற்றல் உடையவர்கள் யார்? (ஆகவே அவனுடைய கொடு மையை நீக்க வேண்டில் பக்தர்களாக வேண்டும். பக்தர்கள் எப்படி இருப்பார்கள்?) பல வகையான பண்களோடு பல வகைச் சுவைகளையுடைய இறைவர் புகழ் சொல்லும் பாடல் களைப் பாடி, தம்மை மறந்து ஆடும் பக்தர்களுக்கு அந்தப் பெருமான் என்றும் கண்ணுக்குள் இருக்கும் மணியாக இருந்து