பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. களைகண் காணேன்

மனிதன் வாழும் போது ஒவ்வொரு சமயத்தில் ஒவ் வொன்றை அவாவுகிருன். பசிக்கும்போது உணவையும் உறக்கம் வரும்போது படுக்கையையும் தேடுகிருன். காம உணர்ச்சி வரும்போது பெண்ணையும் வறுமை வாட்டும்போது செல்வத்தையும் நோயால் நலிவுறும்போது மருந்தையும் தேடுகிருன். இவை அவ்வப்போது தேவையானவை.

வாழ்க்கையில் நெடுநாள் வைத்துப் பயன்படுத்தும் பொருள்களையும் அவன் நாடி முயன்று பெறுகிருன். வாழ் வதற்கு வீடு வேண்டும்; அதைக் கட்டிக் கொள்கிருன். உணவுப் பொருள் பெற நிலம் வேண்டும்; அதை வாங்கி உழுகிருன். பிற்கால வாழ்க்கையில் வருந்தாமல் வாழ முன் கூட்டியே வைப்பு நிதியைச் சேமித்துக் கொள்கிருன்.

நெடுநாள் பயன்படும் பொருள்களைச் சேமிப்பதற்கு அதிக முயற்சி வேண்டும். பெருந்தொகையை ஈட்டி வைத்துக் கொண்டால் அது நெடுநாளைக்குப் பயன்படும். அதற்குப் பெருமுயற்சி செய்ய வேண்டும். இந்தப் பிறவியில் எய்ப்பு வரும்போது சிரமப்படாமல் வாழ இன்ஷ்யூரன்ஸ் செய்து கொள்கிருேம்.

இந்த உடம்பு வாழும் வாழ்க்கை ஒரு காலவரையறைக்கு உட்பட்டது. இந்த உடம்பு போய்விட்டால், இப்போதுள்ள வாழ்க்கை முடிவடைகிறது. ஆனால் உயிரின் வாழ்க்கை இதோடு முடிவடைவ தில்லை. உயிரின் வாழ்க்கை என்பது மிகப் பெரிய நெடுங்கதை. அதில் இந்தப் பிறப்பு ஒர் அத்தி யாயம். இதற்கு முன் எத்தனை அத்தியாயங்கள் இருந் தனவோ, நாம் அறியோம். இனியும் எத்தனை அத்தி

தே-9 -