பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அச்சம் இல்லை 9


"சொல்லுங்கள். கேட்டுப் பயன் பெறுகிறோம்” என்று பவ்யமாகச் சொல்கிறோம். 

அவர் விளக்கமாகச் சொல்லப் புகுகிருர்,

செல்வர்கள் மார்பில் சந்தனம் பூசிக்கொள்வார்கள். அவர் திருநீற்றையே வெண்மையான சந்தனக் குழம்பாகப் பூசி யிருக்கிறார்.

சுண்ணவெண் சந்தனச் சாந்தும்

அவரை இனம் கண்டு கொள்வது எளிது. அவர் தம் திரு முடிமேல் சுடர்விடும் சந்திரனைச் சூடியிருக்கிறார். அரிய இரத்தினங்களைச் செல்வர்கள் சூளாமணியாக அணிவார்கள். அந்தச் செல்வரோ சுடர்த்திங்கட் சூளாமணியை உடையவர்.

சுடர்த்திங்கட் சூளா மணியும்

எல்லாரும் பட்டும் பீதாம்பரமும் அணிவார்கள். அவற்றை யெல்லாம் மற்றச் செல்வர்கள் உடுக்கட்டும் என்று வழங்கி விட்டு அவர் தோலையே தம் உடையாகப் புனைந்திருக்கிறார். இடையில் யானைத் தோலையும் மேலே புலித் தோலையும் உடையாக உடையவர் அவர்.

வண்ண உரிவை உடையும்.

இந்தத் தோல்களைக் கொண்டு, 'இவர் என்ன, இப்படிக் தோலாண்டியாக இருக்கிறாரே! இவருக்கு வேறு உடை இல்லையா? ஒருகால் தம்முடைய அழகற்ற உருவத்தை மறைக்க இவற்றைப் பயன்படுத்துகிருரோ?” என்று எண்ணக் கூடாது. அவர் வண்ணம் பவள வண்ணம். பார்க்கப் பார்க்க எழில் மிகுந்து வளர்ந்து தோன்றும் பவள நிறம் அது.

வளரும் பவள நிறமும்.

மற்றச் செல்வர்களைப் போல அவரும் வாகனத்தில் வருவார். மற்றவர்கள் குதிரையும் யானையும் வாகனமாகச் கொண்டு வருவார்கள். அவர் காளைமாட்டையே தம் வாகன