பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க3ளகண் காணேன் - 135

பற்றிக் கொள்வதல்ை எந்தப் பிறவி எடுத்தாலும் பயன் உண்டாகும்.

“பற்றுக பற்றற்ருன் பற்றின; அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு”

என்று திருவள்ளுவர் சொல்கிருர். இறைவனைப் பற்றிக் கொள்ளும் பற்று உயிருக்கே நலம் தருவது; எந்தப் பிறவி எடுத்தாலும் உடன் வந்து துணையாக இருப்பது. அதனுல் தான்,

“புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா நின்அடி

என்மனத்தே, வழுவா திருக்க வரம்தர வேண்டும்’

என்று திருநாவுக்கரசர் வேண்டுகிருர்,

மற்ருெரு பாட்டில், அவ்வாறு பற்றைப் பற்றிக் கொள் ளாமல் வீண் வாழ்க்கை வாழ்ந்தேன். என் முயற்சிகள் யாவும் பயனற்றனவாக உள்ளன. பாழுக்கே நீர் இறைத் தேன்? என்று சொல்கிருர். அந்தப் பாட்டை இப்போது பார்க்கலாம்.

நெடுங்காலம் பயன்படும் பொருள் இது என்று உணர்ந்து கொண்டவன் அதன்மேல் பற்று வைத்து அதைப் பெறவே முயல்வான். ஒரு கணமும் வீண் போகாமல் அதையே எண்ணி எப்படியேனும் அதை அடைந்துவிட வேண்டும் என்ற தீவிர உணர்வோடு இருப்பான். அத்தகைய பெரும்பற்று ஏதும் இல்லாமல் நான் வாழ்க்கையை வீண் போக்கினேன் என்று தம்முடைய பழைய வாழ்க்கையை எண்ணி இரங்கு கிருர் அப்பர் சுவாமிகள்.

பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து

பாழுக்கே நீர் இறைத்தேன்.