பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఊడిr567 காணேன் 137

"நான் எப்படி இருக்கிறேன்? சாக்கடையில் விழுந்து எழுந்தவனைப் போல அல்லவா இருக்கிறேன்? இதை நினைக்கும் போது எனக்கே நாணமாக இருக்கிறது. என்னுல் என்ன செய்ய முடியும்?

ஏற்றுளேன்? என்செய்கேன் யான்?

'இத்தனை காலம் வாழ்ந்தும் மேலும் மேலும் பல துன்பங் களை அநுபவிக்கிறேனேயன்றி அறிய வேண்டியதை அறிந்து கொள்ளவில்லை. சிறிதளவேனும் ஞானநெறியைக் கற்க வில்லை. அஞ்ஞான நெறியிலே நின்று அவதிப்படுகிறேன்.

இடும்பையால் ஞானம் ஏதும் கற்றிலேன்.

'இத்தகைய நிலையினின்றும் நீங்க எண்ணிலுைம் அதற் குரிய உறுதி என்னிடம் இல்லை. உண்மையை உணரா மல் இருக்கும் எனக்கு வேறு யாரேனும் உறுதுண்ை யாக இருந்து இந்தத் துன்பத்தினின்றும் மீட்டால் நான் உய்வேன். அப்படி என் துன்பத்தை நீக்கும் களைகண்ணுக யாரையும் நான் அறிந்து கொள்ளவில்லை. இப்போது அதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் தேவரீரிடம் முறை யிட வந்திருக்கிறேன். முறையிடுகிறேன்.'

களைகண் காணேன்; கடவூர் வீரட்டணிரே!

‘பற்றற்ருன் பற்றினைப் பற்றிக் கொண்டு அவன் அருளைப் பெற முயலும் வாழ்வே பயனுள்ள வாழ்வு. அல்லாத வாழ்வில் எந்த முயற்சி செய்தாலும் அவ்வளவும் பாழுக்கு நீர் இறைத்தாற்போல வீணுகிவிடும். அநுபவத்தில் உலகியற் பற்றில்ை துன்பமே விளையும் என்று உணர்ந்த பிறகாவது இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டும்.