பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 அப்பர் தேவார அமுது:

அவனுடைய அருளால் ஞானம் அடையும் வரையில் நம்

துன்பங்கள் போகா, எல்லாத் துன்பங்களும் நீக்குவதற்குரிய

பெருந்துணைவகை இருப்பவன் இறைவன்தான் என்ற கருத் துக்கள் இந்தத் திருப்பாட்டால் உணரக்கிடக்கின்றன.

பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து

பாழுக்கே நீர்இ றைத்தேன்; உற்றலால் கயவர் தேருர்

என்னும்கட் டுரையோ டொத்தேன்; எற்றுளேன்! என்செய் கேன்கான்! இடும்பையால் ஞானம் ஏதும் கற்றிலேன்; களைகண் காணேன்:

கடவூர்வி ஏட்ட வீரே.

  • திருக்கடவூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே, பற்ற வேண்டிய பொருளைப் பற்றிக் கொள்ளும் பற்று இல்லாத வாழ்க்கை வாழ்ந்து, பாழ்நிலத்துக்கு நீர் இறைப் பாரைப் போலப் பயனற்ற செயல்களிலே ஈடுபட்டேன்; இழி குணம் உடையவர்கள் அநுபவத்தில் துன்புற்ருலன்றித். தெளிவு பெற மாட்டார்கள் என்று பெரியோர் சொல்லும் நல்லுரையோடு பொருத்திப் பார்க்கும்படி உள்ளேன். நான் எப்படி இருக்கிறேன்! என்ன செய்வேன்! துன்பங்களால் நலி வுற்றுச் சிறிதளவும் மெய்யறிவைத் தெரிந்து கொள்ளவில் லையே! என் துன்பத்தைத் தீர்க்கும் துணையைக் காணவில்லை. (தேவரீரை வந்து அடைந்தேன்.)"

(பற்று என்றது உலகப்பற்றைக் குறியாமல் பேரின்ப வாழ்க்கைக்குப் பயன்படும் பற்றைக் குறித்தது. அது, நின் சரணல்லால் சரண் இல்லை என்று இறைவனைப் பற்றிக் கொண்டு நிற்பது.