பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவநெறி அனைத்தும் ஆளுர் 141

பல தெருக்கள் கூடும் சந்திகளில் அவர் இருக்கிருர். "சதுக்கமும் சந்தியும் முருகன் உறையும் இடங்களிற் சில என்று திருமுருகாற்றுப்படையில் வருகிறது. -

அந்தி மாலையில் அவர் தோற்றம் அளிப்பார். பிரதோஷ காலமாகிய அந்த நேரத்தில் ஆடல் புரிபவர் அவர்.

சந்தியார்; அந்தி உள்ளார். -

எம்பெருமான் தவக் கோலத்தோடு எழுந்தருளியிருக்கிருர். தோலாடையும் சடை முடியும் தவம் செய்பவர்களுக்குரிய சின் னங்கள். சிவபிரானிடம் அந்தச் சின்னங்களைக் காணுகிருேம். அவர் தவநெறிக்குரிய கோலத்தைத் தரித்து நிற்கிருள்.

தவநெறி தரித்து கின்ருர்,

தம்மையே மனத்தில் வைத்துத் தியானிப்பவர்கள் உள் ளத்தில் அவர் தம் காட்சியைக் காட்டி எழுந்தருளியிருப்பார். எல்லாருடைய உள்ளத்திலும் அவர் இருந்தாலும் அவ்வாறு இருப்பது அவர்களுக்கே தெரியாது. தம்மை நினைப்பவர்கள் உள்ளத்திலே விளக்கமாக அவர்களுக்குக் காட்சி அளிப்பதஇல் அவ்விடத்தில் மட்டும் உள்ளவரைப் போலத் தோன்றுவார். நிலத்துக்கு அடியில் எங்கும் நீர் இருந்தாலும் நமக்குத் தெரிவி தில்லை. கிணறு வெட்டில்ை அந்தக் கிணற்றிலிருந்து நீரை எடுக்கலாம். அதைக் கிணற்றுநீர் என்று சொல்கிருேம். பூமிக் கடியில் உள்ள நீரேயானலும் கிணற்றிலே நாம் காணும்படி இருக்கிறது. அதுபோல எல்லார் உள்ளங்களிலும் இருக்கும் இறைவன் தம்மைத் தியானிப்பவர் உள்ளத்தில் காட்சி தருவ தல்ை அங்கு மட்டும் உள்ளவரைப் போலத் தோன்றுவார்.

சிங்தையார் சிங்தை உள்ளார்.

- எம்பெருமான அடைவதற்குரிய மார்க்கங்கள் பல

அவையெல்லாம் அவரை அடையும் நெறிகள்; சிவநெறிகள். மற்றவை யாவும் அவநெறிகள். ളുഞ്ഞുഖഞ് அடைவதையே