பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 அப்பர் தேவார அ முது:

லட்சியமாகக் கொண்டு கடைப்பிடிக்கும் நெறி எதுவாக இருந்: தாலும் அந்த நெறியிலே அவர் நின்று துணை செய்வார். அவரே அந்த நெறிகள் அனைத்துமாக இருப்பார். மவுண்ட் ரோடு என்பது நீண்டிருக்கிறது. சென்னையை அடையும் வரையில் அது சென்னைக்குப் புறம்பானது. அது ரோடாக இருந்தாலும் சென்னையை அடைந்த பிறகு அது சென்னையின் பகுதியாகவே ஆகிவிடுகிறது. அது போலச் சிவநெறிகள் யாவும் ஒரு நிலையில் அவராகவே ஆகிவிடுகின்றன. -

சிவநெறி அனைத்தும் ஆளுர்,

அவரே நமக்கெல்லாம் தந்தையார். தந்தை தன் மகனை நல்வழிக்குக் கொண்டு வரவேண்டுமென்று எண்ணி வேண்டிய வற்றை அளித்தும், சிறிய தவறு செய்தால் பொறுத்தும், பெரிய தவறு செய்தால் ஒறுத்தும் வழிப்படுத்துவது போல் எம்பெருமானும் செய்கிருர்.

எங்தையார்,

அவரே உயிருக்குத் தந்தை.

அடியார்களுக்கு வேண்டியவற்றை வழங்கியருளும் பர மோபகாரி அவர். வேறு யாராலும் கொடுப்பதற்கரிய முத்திச் செல்வத்தையே அடியார்களுக்குத் தருவார்.

எம்பிராஞர். - இத்தகைய எம்பிரான் சோழ நாட்டிலுள்ள திருவிடை மருதூரில் கோயில் கொண்டு நித்திய வாசம் செய்கிருர்,

இடைமருது இடம் கொண்டாரே.

அன்பர்களின் உள்ளத்திலே வெளிப்பட்டு நிற்கும் அவர்

மற்றவர்களும் புறக்கண்ணுல் தரிசித்து அன்பராகும்படி திருக். கோயிலில் கோலம் காட்டிக் கொண்டு எழுந்தருளியிருக்கிருர்.