பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவநெறி அனைத்தும் ஆளுர் - 143.

இடைமருதாகிய குறிப்பிட்ட ஓரிடத்தில் எழுந்தருளியிருந்: தாலும் அவர் எல்லோருக்கும் முந்தியுள்ளவர்; திரிமூர்த்தி களுக்கும் முதல்வர்; சந்தியிலும் அந்தியிலும் உள்ளவர்; சிவ. நெறியாய் நிற்பவர்; அடியார்களுக்குத் தந்தையாகவும். சிறந்த உபகாரியாகவும் விளங்குபவர்.

முந்தையார் முக்தி உள்ளார், மூவர்க்கும் முதல்வர் ஆளுர் சந்தியார்; சந்தி உள்ளார்; தவநெறி தரித்து கின்ருர், சிங்தையார் சிங்தை உள்ளார்; சிவநெறி அனைத்தும் ஆளுர்; எந்தையார், எம்பிராளுர், இடைமருது இடங்கொண்டாரே,

  • எல்லோருக்கும் முற்பட்டவர்கள் என்று சிறப்பிக்கும் யாவர்க்கும் முற்பட்டிருப்பவர், திரிமூர்த்திகளுக்கும் முன் உள்ள முதல்வரானவர், சந்திகளில் இருப்பவர், அந்தி மால் யில் கோலம் காட்டி ஆடுபவர், தவக் கோலத்தைத் தாங்கி நின்றவர், தம்முடைய சிந்தையில் எண்ணுவாருடைய உள்ளத் தில் விளக்கமாக உள்ளவர், சிவநெறிகள் அனைத்துமானவர், எமக்குத் தந்தையாராக உள்ளவர், எம்முடைய பரமோபகாரி யாக உள்ளவர்; அத்தகைய சிவபெருமான் திருவிடை மருதூர்த் திருக்கோயிலைத் தமக்கு இடமாகக் கொண்டு எழுந்: தருளியுள்ளார்."

(முந்தையார்-முன்பு உள்ளவர்கள். மூவர்க்கும்: உம்மை, முற்றும்மை. மூவர்க்கும் மேற்பட்டு முதல்வராக இருப்பவர். சந்தி-தெருக்கள் கூடும் இடம். அந்தி-அந்தி மால். தவ நெறி-தவவழியிற் செல்வோர் கொள்ளும் கோலம்; ஆகு. பெயர். சிந்தையார்-தம்மைத் தியானிக்கும் சிந்தையை உடைய அன்பர்களுடைய, சிவநெறிகள் பல; அவை அனைத்து. மாக உள்ளவர் அவர். பிரான்-உபகாரி; தலைவன் எனலும். ஆம்.