பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 அப்பர் தேவார அமுது'


மாகக் கொண்டவர்; தருமத்தையே விடையாகக் கொண்டு ஊர்பவர். அது மிக்க பெருமையையும், வலிமையையும் உடையது; அவரை நம்பினவர்களுக்கு அரணாக நிற்பது.

அண்ணல் அரண் முரண் ஏறும்.

அவர் அணியும் அணிகலன் எது தெரியுமா? பொன்னும் நவமணிகளும் பிறர் பூணக் கொடுத்துவிட்டு நஞ்சுமிழும் நாகத்தையே தம் திருமார்பில் அணிந்திருக்கிருர், படையும் நடுங்கும் பாம்பு அவர் திருமார்பில் அடங்கி ஒடுங்கி அணி கலனாகப் பளபளக்கிறது.

அகலம் வளாய அரவும்.

இத்தகைய பெருமானே அடியவர்களுக்கு அருள் செய்யும் பொருட்டுக் கெடில ஆற்றின் கரையில் திருவதிகையில் எழுந்தருளியிருக்கிறார். திண்ணிய நல்ல கெடிலப் புனலைத் தமக்குரிய அபிடேக நீராகக் கொண்டவர் அவர்.

திண்ணன் கெடிலப் புனலும் உடையார்

"அத்தகைய பெருமானுக்கு உறவானவர் யாம், ஆதலால் நாம் அஞ்சும் பொருள் யாதும் இல்லை. இனிமேல் அஞ்சும்படி வரத்தக்க பொருள் ஒன்றும் இல்லை’ என்று உறுதியோடு சொல்கிருர்.

உடையார் ஒருவர் தமர்காம்;
அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை;
அஞ்ச வருவதும் இல்லை.

உலகிலுள்ள வலிய பொருள்களின் சார்பு பெற்றவர்கள் பலவற்றுக்கு அஞ்சுவதில்லை. எல்லாம் வல்ல எம்பெருமானுடைய துணையைப் பெற்றவர்களுக்கு நிகழ்காலத்திலும் அச்சம் இல்லை; வரும் காலத்திலும் அச்சம் இராது. அவர்கள் அஞ்சும் படி வரத்தக்கது யாதுமே இல்லை.

இந்தத் திண்ணிய நிலை எல்லோருக்கும் வருமா? அதற்குரிய வகையில் முயன்றால் நிச்சயமாக வரும்.