பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. ஆவி வாழும் குடில்

ஒரு தகப்பனர் தம்முடைய மகனுக்கு ஒரு வீட்டைக் கட்டிக் கொடுத்து அதில் அவனே வாழும்படி வைத்தார். அந்த வீடு சிறிய கூரை வீடு. அதற்கு இரண்டு தூண்களை நட்டு அவற்றின்மேல் அமைத்தார். இரண்டு பக்கங்களில் இரண்டு சார்புகளை அமைத்தார். பல கழிகளை வரிசையாகப் பரப்பி வைத்துக் கட்டினர். அவற்றின் மேல் வைக்கோலை வேய்ந்தார். சுற்றிச் சூழ நீரால் குழைத்த சுவரை வைத்தார். அதற்கு உள்ளே புகுவதற்கு ஒரு வாசலும் புறக்கடையில் ஒரு வாசலும் வைத்தார். அவை அந்தக் குடிசைக்கு ஏற்றவை. யாக அமைந்தன.

அந்தக் குடிலுக்கு ஏழ சாளரங்களை அமைத்தார். அதன் எழிலைப் பார்த்துத் தன் மகன், இது நன்ருயிருக்கிறது’ என்று அதனிடம் விருப்பம் உண்டாகும்படி செய்தார். பிறகு அந்தக் குடிலில் தம் மகனைக் குடிபுகும்படி செய்தார்.

இப்படிச் சொன்னல் யாரோ ஒருவருடைய கதை போலத் தோற்றுகிறது. உண்மையில் ஒவ்வொரு மனிதனையும் இப்படி அமைத்திருக்கிருர், திருமறைக்காட்டில் எழுந்தருளியிருக்கும். சிவபெருமான். .”

அவர் கட்டிக்கொடுத்த வீடு உடம்புதான். இந்த உடம்பு நடக்கும் குடிசையாக இருக்கிறது. அது ஒர் அதிசயம். ரெயில்வேக்களில் எல்லா வசதிகளும் பொருத்திப் பல காலம் தங்கும்படி சில வண்டிகளை அமைப்பார்கள். அவ்வாறே இந்தக் குடிசை இருக்கிறது. -

உலாவும் குடிசையாகிய இதற்கு இரண்டு கால்கள் இருக் கின்றன. அவையே ஓரிடத்தில் இருக்கவும் பிறகு வேண்டும் போது நகர்ந்து செல்லவும் அமைந்த சக்கரங்களைப் போலப் பயன்படுகின்றன. . ... و