பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{46 அப்பர் தேவார அமுது

கால் கொடுத்து.

இந்தக் குடிசையில் இரண்டு பக்கமும் இரண்டு சார்பு களைப் போலக் கைகள் இருக்கின்றன. குடிசை இயங்குவது ஆச்சரியம். இந்தக் கைகளை வேண்டும்போது மேலே தூக்க லாம்; வேண்டாதபோது தாழ்த்திக் கொள்ளலாம். சில வீடு களில் பக்கவாட்டில் சில அமைப்புகள் இருக்கும். அவற்றை வேண்டும்போது மேலே சென்று விரிந்து நிற்பதற்கும் வேண் டாதபோது மடக்கிக் கொள்வதற்கும் ஏற்றபடி பொறிகளை அமைத்திருப்பார்கள். குடையை விரிப்பது போலவும் சுருக்கு வது போலவும் அவற்றின் செயல்முறை இருக்கும். மறைக் காடனர் அமைத்த குடிலில் இருபக்கத்திலும் உள்ள அமைப் பும் இப்படியே இருக்கும். வேண்டும்போது உயர்த்தலாம்; நீட்டலாம்; வேண்டாதபோது இறக்கித் தாழ்த்திக் கொள்ள லாம்,

இரு கை ஏற்றி.

இந்தக் குடிசையில் பல கழிகள் இருக்கின்றன. அவற் றுக்கு எலும்புகள் என்று பெயர். குடிசையில் எல்லாப் பாகங் களிலும் இந்தக் கழிகள் இருக்கும். கூரையில் இருக்கும்; வாசலில் இருக்கும்; படலில் இருக்கும்.

கழி கிரைத்து.

இந்தக் குடிசையின் சுவர்களில் தண்ணிரை விட்டுக் குழைத்த மண்ணை அப்பியிருக்கிருர், அதன் மேலே மெல்லிய தாக அழகிய பூச்சைப் பூசிப் பளபளக்கச் செய்திருக்கிருர், இறைச்சி என்பதே மேய்ந்த பொருள்; குருதியே நீர் தோலே மேல் பூச்சு.

இறைச்சி மேய்ந்து

தோல் படுத்து உதிர ரோல் சுவர் எடுத்து.