பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவி வாழும் குடில் 147

இந்தக் குடிசையில் உணவை உட்செலுத்தும் வாய் ஒரு வாசல். கழிக்க வேண்டியதைப் புறத்தே கழிக்கும் எருவாய் மற்ருெரு வாசல். இந்த இரண்டையும் எப்படி வைக்க வேண் டுமோ அப்படிப் பொருத்தமாக வைத்திருக்கிரு.ர்.

இரண்டு வாசல்

ஏல்வுடைத்தா அமைத்து.

இந்தக் குடிசையில் இரண்டு வாசல்களையல்லாமல் ஏழு சாளரங்கள் உண்டு. அவை கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, நாசித் துவாரங்கள் இரண்டு, கருவாய் ஒன்று. இவை எல்லாம் சேர்ந்து நவத்துவாரங்கள் உள்ள குடிசை

இது.

இத்தகைய குடிசையைக் கட்டித் தந்து இதிலே வாழ வேண்டும் என்ற ஆசையை மக்களுக்குக் கொடுத்திருக்கிருர் . 'இது இத்தனை சிறியதாக இருக்கிறதே! நன்ருக இல்லையே! இந்த அழுக்கு நிறைந்த இடத்தில் இனிமையாக வாழ முடியுமா?’ என்று எண்ணுமல், இது ஏதோ கிடைத்தற்கரிய அருமையான மாளிகை என்று எண்ணி இதில் வாழ்கிருேம். ஆவியாகிய நாம் இதில் வாழும்படி மறைக்காடனர் வைத் திருக்கிருர், .

மால் கொடுத்து ஆவி வைத்தார்,

மாமறைக்காடளுரே.

இது குறையுடையதென்றும், அழுக்கு நிறைந்ததென்றும், நிலையாததென்றும் நாம் நினைப்பதில்லை. மரணம் என்னும் பெருங்காற்று வீசில்ை இந்தக் குடிசை நிலைகெட்டுச் சிதறி வீழும்; உள்ளே இருப்பவராகிய உயிர் வேறு குடிசையைத் தேடிப் போய் விடுவார். இவற்றை எண்ணுமல் இந்த உடம்பே சதம் என்று எண்ணி இதைப் பேணிப் பாதுகாத்து வைத்துக் கொள்கிருேம். உயிர் என்றும் புகுந்து இன்புற்று