பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவி வாழும் குடில் 149

கால்கொடுத்து இருகை ஏற்றிக்

கழிகிரைத்து இறைச்சி மேய்ந்து தோல்படுத்து உதிர ரோல் - கல்வர்.எடுத்து இரண்டு வாசல் ஏல்வுடைத் தாஅ மைத்துஅங்கு ஏழுசா லேகம் பண்ணி மால்கொடுத்து ஆவி வைத்தார்

மாமறைக் காட ளுரே. -

  • பெருமையையுடைய திருமறைக்காட்டில் எழுந்தருளிய சிவபெருமான், குடிசையைத் தாங்கும் தூண்களைப் போல, இரண்டு கால்களைக் கொடுத்து, இருபக்கத்திலும் இரண்டு சார்புகளைப் போல இரண்டு கைகளை மேலே ஏற்றி வைத்து, எங்கும் கழிகளைப் போல எலும்புகளை வரிசை வரிசையாகப் பொருத்தி, ஊனென்னும் கீற்ருல் வேய்ந்து, மேலே தோல் பூச்சைப் பூசி, இரத்தம் என்னும் நீரினல் குழைத்துச் சுவர்க ளாகிய உடம்பின் உறுப்புக்களை அமைத்து, வாய், மலங் கழிக்கும் இடமாகிய இரண்டு வாசல்களைப் பொருத்தமுடை யனவாக அமைத்து, அந்தக் குடிசையில் கண் இசண்டு, காதுகள் இரண்டு, நாசித்துளை இரண்டு, சிறுநீர் கழிக்கும் உறுப்பு ஒன்று ஆகிய ஏழு சாளரங்களை வைத்து, இந்தக் குடிசையில் வாழவேண்டுமென்ற ஆசையைக் கொடுத்து இதனுள் உயிரை வைத்தார்." -

(குடிசையைக் கட்டும் முறையில் சொல்லாமல் முன் பின்னக வைத்தார் செய்யுளாதலின். பொருள் தொடர்பு அமையும்படி, உதிர நீரால் சுவர் எடுத்து, கால் கொடுத்து, இரு கை ஏற்றி, இரண்டு வாசல் ஏல்வுடைத்தா அமைத்து, ஏழு சாலேகம் பண்ணி, இறைச்சி மேய்ந்து ஆவி வைத்தார், என்று அந்வயம் செய்து கொள்ளவேண்டும்.

கால்-உடம்பிலுள்ள கால், கம்பம். கை-கரம், வீட்டில் இரு பக்கங்களிலுள்ள சார்பு. கழி-எலும்பு, குச்சிகள். நிரைத்து. வரிசையாக வைத்து.இறைச்சியாகிய கூரை, வேய்ந்து என்பது

தே-10