பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. நீதியார்

சிவபெருமான் தம் சடையில் மற்றவர் சூடாதவற்றைச் சூடியிருக்கிருர். அழகும் சிறப்பும் உள்ள பொருள்களைப் பிறர் அணியும்படி வழங்கிவிட்டு மற்றவர் அணியக் கூசுகின்ற வற்றை அவர் அணிந்திருக்கிருர், தியாகிகள் இப்படித்தான் செய்வார்கள். சுயநலக்காரர்கள் நல்லவற்றை யெல்லாம் தாங்கள் எடுத்துக் கொண்டு அல்லாதவற்றை மற்றவர் களுக்குத் தாராளமாகக் கொடுக்க வருவார்கள். 'அழுகல் பழம் ஐயருக்கு’ என்ற பழமொழி இந்தக் கருத்தைத் தெரிவிக் கிறது.

இறைவர் கார்காலத்தில் மலரும் கொன்றை மாலையைச் சூடியிருக்கிருர், அதோடு கதிர் வீசும் பிறையையும் அணிந் துள்ளார். அரவுகளையும் புனைந்திருக்கிருர். அரவும் மதியும் ஒன் றற்கு ஒன்று பகையாக உள்ளவை, அவை இறைவருடைய சடையில் பகை உணர்ச்சி இன்றிச் சேர்ந்திருக்கின்றன. இறை வரிடம் ஈடுபட்டவர்கள் பகைத்தன்மை இல்லாமல் ஒன்றி யிருப்பார்கள் என்ற உண்மையை அந்தச் சேர்த்தி புலப்படுத்து கிறது. அங்கே கங்கையையும் வைத்திருக்கிருர். இவ்வாறு பல வற்றையும் ஒன்றுபடுத்தி வைக்கும் நீதியை உடையவர் எம் பெருமான். -

காருடைக் கொன்றை மாலை

கதிர் மதி அரவிளுேடு

நீருடைச் சடையுள் வைத்த

நீதியார்.

அவர் இடபவாகனத்தை உடையவர். தருமமே விடையாக நின்று அவரைத் தாங்குகிறது. அது யாரையேனும் எதிர்த்துப்