பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 அப்பர் தேவார அமுது

பொருமால்ை அந்தப் போர் நியாயத்தை நிலைநாட்டும் போராகவே இருக்கும்.

நீதி ஆய

போருடை விடை ஒன்று ஏற

வல்லவர்.

இத்தகைய எம்பெருமான் திருவிடைமருதூரைத் தம் முடைய வாசத்தலமாகக் கொண்டு எழுந்தருளியிருக்கிருர், அந்தத் தலம் காவிரியாற்றின் தென்கரையில் அமைந்திருக் கிறது. அங்கே நிலவளமும் நீர்வளமும் சிறந்திருப்பதால் அங் கங்கே பொய்கைகளில்,தாமரை மலர்கள் நன்ருக மலர்ந்து அழகு தோன்ற ஓங்கி நிற்கும். இறைவர் எழுந்தளியிருக்கும் திருத்தலத்தில் வளர்கிருேம் என்ற உணர்ச்சியினல் அப்படி மலர்கின்றனவோ? அடியார்கள் இறைவரைத் தரிசித்து முகம் மலர நிற்பார்கள். அந்தக் காட்சியை இந்தத் தாமரை மலர்கள் நினைவுறுத்துகின்றன.

ஏருடைக் கமலம் ஓங்கும்

இடைமருது இடம் கொண்டாரே.

இறைவருடைய திருவருள் இருந்தால் நீதியும் நேர் மையும் நிலவும். நீதியுடனும் நேர்மையுடனும் உள்ள அன்பர்கள் வாழும் ஊரில் நல்ல மழை பொழியும்,பொய்கைகள் நிரம்பிப் பொலியும், அவற்றில் தாமரை மலர்கள் பூத்துத் தலை நிமிர்ந்து விளங்கும். இந்த எண்ணங்களைத் தோற்றுவிக்கும் படி, திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கும் மகாலிங்கத் தைப் பாடுகிருர் அப்பர் சுவாமிகள்.

காருடைக் கொன்றை மாலை

கதிர்மதி அரவி ைேடு நீருடைச் சடையுள் வைத்த

- - - ரீதியார். திே ஆய