பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதியார் 153

போருடை விடைஒன்று ஏற

வல்லவர், பொன்னித் தென்பால் ஏருடைக் கமலம் ஓங்கும்

இடைமருது இடம்கொண் டாரே.

  • கார் காலத்தைத் தான் மலரும் பருவமர்க உடைய கொன்றை மலர்களால் ஆன மாலையையும், கதிர் வீசும் மதி யையும், பாம்போடு சேர்த்து, கங்கை நீரை உடைய தம் சடையுள் வைத்த நீதி வடிவமாக உள்ளவர், நியாயமான போர் செய்தலை உடைய இடப வாகனம் ஒன்றின்மீது ஏறும் வன்மையை உடையவர், காவிரியாற்றின் தென்கரையில், அழகையுடைய தாமரை மலர்கள் மலர்ந்து உயர்ந்து விளங்கும் திருவிடைமருதூரைத் தம் இடமாகக் கொண்டு நித்தியவாசம் செய்கிரும்.*

(கார் காலத்தில் கொன்றை மலரும்; “கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த், தாரன், மாலையன், மலைந்த கண்ணியன்” (அகநானூறு, கடவுள் வாழ்த்து). கொன்றை மாலைக் கதிர்மதி என்பது ஒரு பாடம். அதற்கு, கொன்றை யையும் மாலையிலே தோன்றும் கதிரையுடைய பிறையையும்’ என்று பொருள் கொள்ளவேண்டும், நீர் என்றது கங்கையை. நீதி-நியதியுமாம். தருமதேவதை தீயவை செய்தாரை ஒறுக் கும், ஆகவே, ‘நீதியாய போருடை விடை’ என்ருர். அறப் போர் என்று இதைச் சொல்வார்கள். எல்லோரும் தருமத்தை வாகனமாகக் கொள்ள இயலாது. தருமத்தை இறைவர் பாது காத்துத் தாங்குகிருர். அதல்ை அது அவருக்கு வாகனமாக இருந்து தாங்குகிறது.

திருமாலே இடபமாக இருப்பதுண்டு. திருமால் உலகில் திருவவதாரம் செய்து பொல்லாதவர்களை அழித்து நியா யத்தை நிலைநாட்டினர். ஆதலின் இங்கே விடையென்றது திருமாலாகிய இடபத்தை என்றும் கொள்ளலாம். ஏர்-அழகு; எழுச்சியும் ஆம். “பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை”