பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அச்சம் இல்லை 11


சுண்ணவெண் சந்தனச் சாந்தும்
சுடர்த்திங்கட் சூளாமணியும்
வண்ண உரிவை உடையும்
வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண்முரண் ஏறும்
அகலம் வளாய அரவும்
திண்னன் கெடிலப் புனலும்
உடையார் ஒருவர் தமர்காம்:
அஞ்சுவதி யாதொன்றும் இல்லை;
அஞ்ச வருவதும் இல்லை.


  • திருநீறாகிய வெண்மையான சந்தனப்பூச்சையும், ஒளியையுடைய சந்திரனாகிய முடியில் அணியும் மணியையும், நிறம் பெற்ற தோலாகிய உடையையும், பார்க்கப் பார்க்கப் புதியதாகத் தோற்றி வளரும் பவளத் திருமேனியையும், பெருமையையும் அன்பர்களுக்குப் பாதுகாப்பாகிய இயல்பையும் வலிமையையும் உடைய இடப வாகனத்தையும், திருமார்பில் அணிகலனாகத் தோன்றும் பாம்பையும், திண்மையும் நன்மையும் உடைய கெடில ஆற்றையும் உடையவராகிய சிவபெருமானுடைய அடியார் யாம்; ஆதலால் நாம் அஞ்சும் பொருள் யாது ஒன்றும் இல்லை; இனி அஞ்சும்படி வரப்போவது யாதொன்றும் இல்லை."

(சுண்ணம்-திருநீறு, சூர்ணம் என்பதன் திரிபு. சந்தனச் சரந்தும் - சந்தனம்போலப் பூசும் பூச்சும்; சாந்து - பூசப்படும் பொருள். சூளாமணி - முடியில் அணியும் மணி; சூடாமணி என்பதன் திரிபு. யானைத் தோலும் புலித்தோலும் வெவ்வேறு வண்ணம் உடையன. உரிவை தோல், சிவபெருமானுடைய திருமேனி ஒருகாலைக்கொருகால் அழகுமிக்குத்தோன்றுதலால், “வளரும் பவள நிறமும்’ என்ருர், அண்ணல்-பெருமை. அரண், பாதுகாப்பு, முரண் - வலிமை. அகலம் - திருமார்பு. வளாய - சேர்ந்த கெடிலத்திற்குத் திண்மை கரையாலும் நன்மை