பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. நினைக்குமாறு நினைத்தல்

திருநாவுக்கரசர் அறியாமையால் சமண சமயத்தைச் சார்ந்து அங்கே ஆசார்ய புருஷராக அமர்ந்திருந்தார். பிறகு இறைவன் திருவருளால் மீட்டும் சைவ சமயத்தை வந்து அடைந்தார். பரம்பரையாக வந்த சிவநெறியை விட்டுப் புறச் சமயத்திற்குச் சென்ற பிழையை நினைந்து நினைந்து வருந் தினர். அந்த எண்ணம் அவர் உள்ளத்தில் உறுத்திக் கொண்டே யிருந்தது. சிவபெருமானுக்கு அடிமை என்ற முத்திரையை மாருத வகையில் பெறவேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. 'எம்பெருமானே, என்மேல் உன் இலச்சினையையும் சூலக் குறியையும் பொறித்தல் வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார். இறைவன் அப்படியே செய் தான். அதன் பின்னும் அவருக்கு மனநிறைவு உண்டாக வில்லை. “காலன் வந்து என் உயிரைப் பிரித்துக்கொண்டு போவதற்கு முன் உன் திருவடி தீட்சையை நான் பெறும்படி அருள்புரிய வேண்டும். இல்லையெனின் தன்னை நம்பினவன நட்டாற்றில் விட்டுவிட்டான் என்ற பழி உன்னை வந்து சேரும்” என்று முறையிட்டார். -

'கோவாய் முடுகி அடுதிறற் கூற்றம் குமைப்பதன்முன்

பூவார் அடிச்சுவடு என்மேற் பொறித்துவை, போகவிடில் மூவா முழுப்பழி மூளும்கண் டாய்; முழங்கும்தழற்கைத் தேவா, திருச்சத்தி முற்றத் துறையும் சிவக்கொழுந்தே"

என்று விண்ணப்பித்தார். மெய்யடியாருக்கு இரங்கியருளும் சிவபெருமான் நல்லூர் என்னும் தலத்தில் அவர் தலைமேல் திருவடி வைத்துத் திருவடி தீட்சை செய்தருளினன். அதனல் பேருவகை அடைந்தார். . . . . . . . . . . . . . . x. -