பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 அப்பர் தேவார அமுது

தரையில் யானை இருந்தாலும் அதன் பிரதி பிம்பம் தெளி வாகத் தெரியும். வானம் தெரியும். கதிரவன் தெரிவான். அருகில் நிற்கும் மரங்களெல்லாம் தெளிவாகத் தெரியும், என் மனம் உன்னுடைய திருவடி தீட்சைக்குப் பிறகு அலை யடங்கிய குளம்போல இருக்கிறது. இதில் எங்கும் உன்னு டைய காட்சியே தெரிகின்றது. உன்னை ஒரு முகமாக நினைக் கும் ஆற்றல் எனக்கு உண்டாகிவிட்டது” என்று சொல்கிருர் அப்பர். -

காலன வீழச் செற்ற

கழல்அடி இரண்டும் வந்துஎன் மேலவாய் இருக்கப் பெற்றேன்;

மேதகத் தோன்று கின்ற கோலநெய்த் தானம் என்னும்

குளிர்பொழிற் கோயில் மேய நீலம்வைத் தனைய கண்ட,

நினைக்குமா நினைக்கின் றேனே.

  • மேன்மை உண்டாகத் தோற்றப் பொலிவுடன் இருக்

கின்ற அழகையுடைய திருநெய்த்தானம் என்னும், குளிர்ந்த பொழில்களையுடைய திருக்கோயிலில் நித்தியவாசம் செய்யும், நீலமணியைப் பதித்து வைத்தாற் போன்ற திருக்கழுத்தை யுடைய எம்பெருமானே, காலனை வீழும்படி அடர்த்த நின் னுடைய கழலை அணிந்த திருவடிகள் இரண்டும் நின் அருளால் தாமே வந்து என்மேல் உள்ளனவாக இருப்பதற்குரிய பெரும் பேற்றை அடியேன் பெற்றேன். (இனி எனக்கு எந்தக் கவலை யும் இல்லை.)"

(கழல்-வீரகண்டை, அதை ஒரு காலில் அணிவது வழக்கம். இறைவன் திருவடிகள் இரண்டும் பல பராக்கிரமச் செயல்களைச் செய்தன வாதலின் கழல்களை அணிந்தன. வந்து அடியேன் முயன்று தம்மை அடையாவண்ணம் அவை தாமே வந்து. என் மேலவாய்-என்தலைமேல் உள்ளனவாக. இருக்கப்