பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைக்குமாறு நினைத்தல் 159

பெற்றேன்-இருக்கும் பேற்றை அடைந்தேன். மேதக-மேன் மை தக; மேன்மை உண்டாகும்படி, தோன்றுகின்றகோலத்தை யுடைய கோயில், பொழிற்கோயில். கோலம்-அழகு. நெய்த் தானம் என்பது தலத்துக்கும் பெயர்; கோயிலுக்கும் பெயர். சில இடங்களில் இரண்டும் வெவ்வேருக இருக்கும். மேய. விரும்பித்தங்கிய, நீலம்-நீலமணி, கருங்குவளை மலர் என்பது மாம்; குவளைக் களத்தம்பலவன்” (33) என்பது திருக் கோவையார். வைத்தனைய - வைத்தாலனைய. நினைக்குமா - நினைக்குமாறு; ஈறு கெட்டது.)

இது நான்காம் திருமுறையில் 37-ஆம் திருப்பதிகத்தில் வரும் முதற்செய்யுள்.