பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அப்பர் தேவார அமுது - 12



புனலாலும் அமைந்தன. தமர் - அடியார்; பத்திமையால் உறவு பூண்டவர்.

அஞ்சவதியாதொன்றும்: அஞ்சுவது என்பதிலுள்ள குற்றுகரம் யகரம் வரத் திரிந்து குற்றியலிகரம் ஆயிற்று. இது வரைக்கும் அஞ்கம்படி உள்ள ஏதும் இல்லை; இனிமேலும் வரத் தக்க தில்லை என்றார். முக்காலங்களிலும் அச்சமே அறியாத வாழ்வு அவர் வாழ்வு.

இறைவன் அடியார்களுக்கு எதனாலும் அச்சம் இல்லை என்பது கருத்து. - -

நான்காம் திருமுறையில் இரண்டாவது திருப்பதிகத்தில் வரும் முதற்பாட்டு இது.