பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இறைவன் வடிவங்களும் திருநாமங்களும் 19.


யவன்; ஆனால் பல உருவங்களை எடுப்பவன். அவன் ஒன்றாக இருப்பவன்; ஆனால் புதிய பல தோற்றங்களை அவ்வப்போது எடுத்துக் கொள்கிறவன். ஆனலும் அவன் ஒருவன்தான். 'ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி’ என்று வேதம் சொல்கிறது. “உண்மைப் பொருள் ஒன்றே; ஆனல் அதை அறிந்தவர்கள் பலவாகச் சொல்கிருர்கள்’ என்பது பொருள். ஆகவே, அவனுடைய பலவகைத் தோற்றங்களுக்குக் காரணம் அவனை வழிபட்டுப் பக்தி செய்பவர்களின் மனநிலையே என்று சொல்லி விடலாம்.

சிலருக்கு இறைவனைக் குழந்தையாகப் பார்ப்பதில் விருப்பம் மிகுதி, அவர்களுக்கு அவன் குழந்தைக் கண்ணகை, இளமுருகனாகக் காட்சி அளிக்கிறான். சிலருக்குத் துறவியாக, ஞானமூர்த்தியாக எண்ணும் இயல்புஇருக்கிறது. அவர்களுக்கு அவன் தட்சிணுமூர்த்தியாகக் கோலம் காட்டுகிறான். சிலர். அவனை அன்னையாக எண்ணி அன்பு செய்கிருர்கள். அவர்களுக்கு அவன் தாயாக, அன்னை பராசக்தியாகத் தரிசனம் தருகிறான்.

இவ்வாறு அன்பர்களின் விருப்பப்படி வடிவங்கொள்ளும் அவனை எப்படி வருணிப்பது? அவனுக்கு எத்தனை திருவடிகள் என்று சொல்வது? இரண்டு திருவடி என்ருல் ஏக பாத மூர்த்தி என்று சிவபெருமானுடைய கோலங்களில் ஒன்று ஒற்றைக் காலோடுகாட்சிஅளிக்கிறது.இரண்டு கால்களுக்கு மேல் இல்லை என்றால் வேதம் அவனுக்கு ஆயிரங்கண், ஆயிரம் பாதங்கள் (ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ர பாத்) என்று கூறுகிறது.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது அவனுடைய வடிவத்தில் காணும் உறுப்புக்களுக்குக் கணக்கு வழக்கே இல்லையென்று தோன்றுகிறது. பக்தர்களுடைய கணக்கை வரையறுக்க முடிந்தால் அவன் வடிவத்தையும் வரையறுக்கலாம். இரண்டையும் வரையறுப்பது என்பது இயலாத காரியம்.