பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அப்பர் தேவார அமுது


இளம் பெண்ணுக்கு எம்பெருமானப் பற்றிய புகழ் எப்படித் தெரிந்தது?

வணபவள வாய் திறந்து வானவர்க்கும்
தானவனே என்கின்றாளால்.

“அதுமட்டுமா? அவள் அவனைத் தரிசித்து அவன் உருவத்தைத் தன் உள்ளத்தில் படம் பிடித்தல்லவா வைத்திருக்கிறாள்! அவளுக்கு அவன் தோளை அணைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது போலும்! அந்தத் தோள்களின் திண்மையைப் பாராட்டுகிருள். பவளம் போலச் செக்கச் செவேலென்ற திருத்தோளில் பெருமான் தன் சின்னமாகிய திருநீற்றைப் பூசியிருக்கிறான். அந்த வெண்ணீற்றையும் அதை அணிந்த தோள்களையும் சொல்லிச் சொல்லிப் பூரித்துப் போகிறாள்.”

சின பவளத் திண்தோள்மேல் சேர்ந்திலங்கு வெண்ணீற்றன் என்கின்றாளால்.

"ஆம்! சிவப்பான திண்ணிய தோளில் வெண்மையான நீறு விளங்குகிறது. அதைக் கூர்ந்து கவனித்திருக்கிறாள். திரு நீற்றுப் பூச்சினூடே அவனுடைய செவ்வண்ணத் திருமேனியைக் கண்டு களித்திருக்கிறாள்."

'அவன் பெண்களுக்கு இனியவன் என்பதையும் அல்லவா அறிந்திருக்கிறாள்? அவன் பவள மேகலையை அணிந்த உமாதேவியோடு எழுந்தருளியிருப்பதைக் கண்டிருக்கிறாள். தனக்கும் அப்படி ஒரு நிலை கிடைக்குமா என்ற ஏக்கம் அவள் உள்ளத்தில் எழுந்திருக்க வேண்டும்.

அன பவள மேகலையோடு.

'ஆனாலும் அவன் யாவருக்கும் எளியவன் அல்லன் என்பதையும் உணர்ந்திருக்கிறாள். ஐம்பூதங்களுக்கும் அப்பாலே, ஐம்பொறிகளுக்கும் அப்பாலே, மனத்துக்கும் அப்பாலே, மனத்துக்கும் எட்டாத் அப்பாலைக்கும் அப்பாலே இருப்பவன் அவன் என்பதையும் உணர்ந்து சொல்கிறாள்.