பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


- மனத்தே வைத்தேன் 33

வைக்கிறார்கள். குப்பைக்குத் தீ வைத்தது போல அந்தச் செயல் அமைகிறது. அனலேந்தும் பெருமானை வைத்த மனம் மாசு நீங்கித் தூய்மை பெறுகிறது. கள்ளியும் முள்ளியும் முள்மரமும் படர்ந்த காட்டிலே தீயை வைத்தால் எல்லாம் எரிந்து போக, அவ்விடம் சுத்தமாகிவிடுகிறது. செறிவான காட்டிலே பயிர் செய்ய விரும்புகிறவர்கள் அந்தக் காட்டை எரித்துவிட்டு உணவுப் பயிரை விளைவிப்பார்கள். கரவாடும் வன்னெஞ்சர் மனம் அந்தக் காடு போன்றது. பிறர் பறிக்க முடியாமல் முள் அடர்ந்த ஈச்சமரக் காடு போன்றது என்று கூடச் சொல்லலாம்.

இறைவனை உள்ளத்தே வைத்தவர் திருதாவுக்கரசர்.

இரவாடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே!

அதனால் அவர் மனத்தில் குப்பை இல்லை. சுத்த வெளி யாகிவிட்ட அங்கே ஆண்டவன் களிக்கூத்தாடுகிருன். குப்பைக் காடாக இருந்த அந்த உள்ளம் இப்போது இறைவன் ஆடும் நடன அரங்கு ஆகிவிட்டது.

கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியானைக் கரவார்பால்

விரவாடும் பெருமான விடைஏறும் வித்தகனை

அரவாடச் சடைதாழ அங்கையினில் அனல்ஏந்தி

இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே!

  • தம்மிடம் உள்ளதைப் பிறருக்கு ஈய விருப்பமின்றி ஒளிந்தலைச் செய்யும் வன்மையான நெஞ்சை உடையவர்களுக்கு அறிவதற்கு அரியவனும், அவ்வாறு கரக்காமல் உள்ளதை வழங்கும் உத்தமர்களிடம் விரவுதலைச் செய்யும் பெருமானும், இடபத்தில் ஏறிவரும் சர்வக்ஞனும், தான் அணிந்த பாம்புகள் ஆடவும் சடை தொங்கி ஆடவும் அகங்கையில் அனலை ஏந்திக் கொண்டு நள்ளிரவில் நடனம் செய்யும் பெருமானுமாகிய