பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 அப்பர் தேவாரம்

சிவபிரானை என் மனத்துள் வைத்தேன். (இனி எனக்கு, யாதொரு குறையும் இல்லை.):

[கரவு-ஒளித்தல், ஆடும்-செய்யும், "கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்" என்று பிறிதோரிடத்தில் பாடுவார் திருநாவுக்கரசர். பிறருடைய வறுமை கண்டு நெஞ்சம் இளகுதல் நல்லோர் இயல்பு. கொடிய வறுமையால் அல்லற்படுவோரை நேரே கண்டும், அவர் கேட்டபோது கொடாமல் உள்ளதைக் கரந்து நிற்பவர் மனம் இரக்கமில்லாத மனம். அதனல் அவர்களை வள்னெஞ்சர் என்ருர். விரவு ஆடும்-விரவுதலைச் செய்யும்; அவர்களோடு கலசி அருள் பாலிக்கும். விடை-இடபம், வித்தகன்- சகலகலைகளையும் உணர்ந்த சர்வக்ஞன். அங்கை-உள்ளங்கை; அழகிய கை என்றும் கொள்ளலாம். இருட்டில் ஆடுவான், அந்த நேரத்தில் வருவார் தன்னை அடையாளம் கண்டுகொள்ளும்படி அனல் ஏந்தி ஆடுகிருன். இரவில் ஆடும்.

தம் மனத்தே வேறு எதையும் வைக்காமல் பெருமானையே வைத்து, வறியவன் பெற்ற செல்வத்தைப் போலவும் மலடி பெற்ற மகவைப் போலவும் பாதுகாக்கிறவர் அப்பரடிகள். பெருமானையே என்ற பிரிநிலை ஏகாரம் தொக்கது. வைத்தேனே : ஏகாரம், ஈற்றசை.

இறைவனை என் மனத்தில் வைத்துக் கொண்டமையால். எனக்கு ஒரு குறையும் இல்லை என்பது குறிப்பு. எண்ணினேன், நினைத்தேன் என்று சொல்லாமல் வைத்தேனே என்றார், அந்தப் பெருமானைப் பெருஞ்செல்வமாக வைத்துப் போற்றுததலை எண்ணி. வைப்பு என்பது சேமித்து வைக்கும் பொருளுக்குப் பெயர். பொருளைச் சேமித்து வைத்தவருக்கு அதனை ஈட்ட இயலாத எய்ப்பு வரும்போது ஈட்டி வைத்த செல்வம் உதவும். அதனால் அதனை எய்ப்பினில் வைப்பு என்று. சொல்வது மரபு. இறைவனே மனத்தில் வைப்பாகக்