பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மங்கையோடிருக்கும் யோகி

43


குழுவினர் தொழுது எழும் அடியர்.

அத்தகைய அடியார்கள் தூய சிந்தையும் மொழியும் செயலும் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களைப் பாவங்கள் அண்டுவதில்லை. அப்படி ஏதேனும் பாவம் அவரைப் பற்றி அலைக்காமல் விடமாட்டேன் என்று வந்தாலும் அதை இறைவன் உடனே போக்கிவிடுவான்.

அடியர் மேல்வினை தழுவின கழுவுவர்.

மற்றவர்களைப் பாவங்கள் வந்து தாக்கி அலைத்துக் கொடுமைப்படுத்தும். அடியவர்களையோ, எப்படியாவது இவர்களைக் கெடுத்து விடவேண்டுமென்று சங்கற்பம் செய்துகொண்டு மெல்ல வந்து தழுவுமாம். அப்படித் தழுவ வரும்போது அவற்றைப் போக்கிவிடுவான் ஆண்டவன். உடம்பிலே உள்ள உறுப்புக் குறைபோலவும், நோய் போலவும் பாவங்கள் பிற ரோடு ஒட்டி இணைந்து நிற்கின்றன. அடியவர்களை அவை நெருங்க அஞ்சுகின்றன. அப்படி நெருங்கினாலும் அலைப்பவை போலச் செல்லாமல் தழுவுபவை போல வந்து இணைய முயல்கின்றன. அவற்றை இறைவன் போக்கிவிடுவான்.

இவ்வாறு அடியாரை அணுகும் பாவங்களைக் கழுவும் பெருமான் எப்படி இருக்கிறான்? செக்கச் செவேலென்று பவள வண்ணம் பெற்று விளங்குகிறான்.

பவள மேனியர்.

தன் அடியாருக்கு வரும் இடர்ப்பாடுகளைப் போக்கஅவன் என்றும் ஆயத்தனாக இருக்கிறான். அதற்கு அடையாளமாகத்தன் திருக்கரங்களில் படைக்கலன்களை வைத்திருக்கிருன்,

மழுவினர்.