பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - -- a - 5. అమణ53urఅఉతా Gur 特

இராமகிருஷ்ண பரமஹம்ஸர் சாரதா தேவியை மணந்து கொண்டார். திருமணத்தால் கணவன் மனைவியராக இருந். தாலும் அவர்களிடையே உடலுறவு இல்லை. மங்கையோடி ருந்தே யோகு செய்த பெருமான் அவர். மனிதர்களிலேயே இப்படி இருப்பது சாத்தியமால்ை, இறைவன் இருப்பதில் என்ன ஆச்சரியம்? மங்கையரிடையே வாழ்ந்தாலும் தவவாழ்வு வாழமுடியும் என்பதை அவன் காட்டுகிருன். பதிருையிரம் கோபிமாரோடு வாழ்ந்தாலும் கண்ணன் பிரம்மசாரியாகவே: இருந்தான்.

இப்படி உள்ள பெருமானத் திருக்கடிலநதிக் கரையி: லுள்ள திருவதிகை வீரட்டானத்தில் தரிசித்து அவனருளுக்கு. ஆட் பட்டவர் அப்பர் சுவாமிகள். அந்தக் கெடில வாணனைப், பற்றி இப்படியெல்லாம் பாடுகிருர்.

குழுவினர் தொழுதுஎழும் அடியர் மேல்வினை தழுவின கழுவுவர்: பவள மேனியர்; மழுவினர்: மான்மறிக் கையர்; மங்கையைக் கெழுவின யோகினர், கெடில வாணரே.

  • கெடிலநதிக் கரையில் திருவதிகை வீரட்டானத்தில் நித்திய வாசம் செய்யும் எம்பெருமான், நல்லவர்களின் கூட்டம் அடியில் விழுந்து வனங்கி எழும் பெருமை பெற்ற: தம் அடியார்களின்மேல் வந்து தழுவினவைகளாகிய பாவங். களைப் போக்குபவர்; பவளம் போன்ற செவ்வண்ணத் திரு மேனியை உடையவர்; திருக்கரத்தில் மழுவை ஏந்தினவர்; மான்குட்டியை உடையவர்; மங்கையாகிய உமா தேவியைப் பொருந்தி நின்ற யோகத்தை உடையவர்.

(குழுவினர்-அடியார்களை வழிபட்டுப் பக்தியுணர்வைப் பெறலாம் என்று வரும் கூட்டத்தினர். தொழுது என்பது பெரும்பாலும் கையால் தொழுவதைக் குறித்தாலும், இங்கே