பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. கைவிட முடியுமா ?

நம்முடைய மனத்தில் எத்தனையோ ஆசைகள் இருக்கின் றன. சில ஆசைகள் அடிக்கடி கிளர்ந்து எழுகின்றன. சில ஆசைகள் உள்மனத்தே அடங்கியிருக்கின்றன. அந்த ஆசை கள் எப்போதாவது வெளிப்படும். உறங்கும்போது, அவை எழுந்து கனவிலே தலைநீட்டுகின்றன. நாம் எதற்காக ஏங்கு கிருேமோ, அது கனவில் வந்து நிற்கும். எதிலே அதிகமாகப் பயின்று மனத்தைப் பதித்து வாழ்கிருேமோ, அதுவும் நம் கனவிலே வந்து எதிர்ப்படும். நனவிலே நல்ல எண்ணங்களை நினைத்துக் கொண்டிருந்தாலும் கனவிலே தீய எண்ணங்களும் அநுபவங்களும் மேலே மிதந்து வந்து நிற்கின்றன. ஆழமாக ஒன்றை நினைத்திருந்தால் அது நனவிலும் கனவிலும் வரும்.

பெரும்பாலும் நனவில் வரும் நிகழ்ச்சிகளுக்கும் கனவில் வரும் நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பே இருப்பதில்லை. நனவில் கோவையாக எண்ணம் இடுகிருேம். கனவில் அப்படி இருப்ப தில்லை. மலைமேல் நடப்பதாகக் கனவு கண்டு கொண்டிருக் கும்போது திடீரென்று அந்தக் காட்சி மாறி ஆற்றங்கரையில் இருப்பதாகத் தோன்றும். கைநிறையப் பொன்னை வைத் திருக்கும் காட்சி தோன்றும்; உடனே ஒரு பாம்பு நம் முன் படம் எடுத்து ஆடுவது போன்ற காட்சி வரும். தொடர்பற்ற சிறு சிறு நிகழ்ச்சிகளே பெரும்பாலும் கனவில் வரும். நன விலும் கனவிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணம் தோன்றுமாயின் அந்த எண்ணம் நம் உள்ளத்திலும் அடிமனத்திலும் வேரூன்றி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

காம வயப்பட்டவர்கள் நனவில்ே அந்த உணர்ச்சியோடு இருப்பார்கள். கனவிலே மங்கையரோடு கூடி மகிழ்வார்கள். அவர்களுடைய உள்ளத்தில் அந்த உணர்ச்சி பதிந்து நிற் கிறது என்பதற்கு இது அடையாளம்.