பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அப்பர் தேவார அமுது

இறைவனிடம் ஈடுபட்டு அவன் சரண் அல்லால் சரண் இல்லை என்று நம்பி மனத்தாலே இறுகப் பற்றிய மெய்யன் பர்களுக்கு நனவிலும் அந்தப் பிடிப்புத் தளராமல் இருக்கும்; கனவிலும் அந்த உணர்வு எழும். மற்றவர்கள் ஜாக்கிரா வஸ்தையில் இறைவனைப் பாடியும் தொழுதும் வழிபட்டு நின் ருலும், கனவில் அந்தக் காட்சிகள் வராமல் காமம், குரோதம் ஆகிய பேய்கள் தலையெடுத்துக் கூத்தாடும்.

அப்பர் சுவாமிகள் நனவிலும் கனவிலும் இறைவனேயே எண்ணி வாழ்கிறவர். அவன்பால் கொண்ட காதல் அவர் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றி நிற்கிறது. துயிலும்பொழு தும் அந்த உணர்வு மாறுவதில்லை. அப்போதும் அவனையே காண்கிருர், இறைவனிடம் காதல் கொண்டு எப்போதும் அவனையே தினேந்து வாழும் மங்கையாகத் தம்மை ஆக்கிக் கொண்ட இந்த அநுபவத்தைச் சொல்கிருர்.

இறைவன் எல்லோருக்கும் நலம் பாலிப்பவன். தன்னைச் சரணுக அடைந்தவர்கள் எத்தகையவர்களானுலும் அவரு டைய மனத்தினுள்ளே நின்று நிலைபெற்றுக் காட்சி தருபவன். அவனையன்றிப்பாசத்தினின்றும் துன்பங்களினின்றும் விடுதலை பெற்று வாழ்வது அரிது. -

மண்ணுலகத்தில் பொருந்தி வாழும் மக்கள் அவனைத் தியானித்து வாழ்வார்களானுல் அவன் அவர்களுக்குப் பிறப்பு இறப்புக்களினின்றும் விடுதலை அளித்துப் பெறற்கரும் பேற்றை வழங்குவான். அந்த வீடு பேறு வேறு அன்று. அவனே அந்தப் பேரானந்தமாக விளங்குகிருன், -

மண் பொருக்தி வாழ்பவர்க்கும் விடுபேருய் கின்றன். வேதம் ஒதி வேள்வி புரிந்து தூய்மையே வடிவாக நிற். கும் வேதியர்கள் வேதத்தின் பொருளாகவும் வேள்வியின் பயணுகவும் இருப்பவன் இறைவனே என்று உண்ர்ந்தவர்கள்: