பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைவிட முடியுமா! 49

எத்தனை வேதம் ஒதினாலும் வேள்விகளைச் செய்தாலும் இறை வனிடம் அன்பு பெருத வர்கள் வீட்டைப் பெறுவதில்லை. தாருகாவனத்து முனிவர்கள் வேதம் ஓதி வேள்விகளைப் புரிந் தார்கள். ஆளுல் ஆண்டவனிடம் பக்தி செய்யவில்லை. அவனு டைய திருவருள் இல்லாமலே வேதமும் வேள்வியுமே அவர் களுக்கு இறுதியிலா இன்பத்தை நல்கும் என்று இருந்தார்கள். ஆண்டவன் அவர்கள் அகந்தையைப் போக்கி உண்மையை உணர்த்தின்ை. அவர்கள் வேதம் ஒதும் வேதியர்களாக இருந் தார்கள்; ஆளுல் மெய்ப்பொருள் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை. மெய்யை உணரும் அகத்துாய்மை அவர் களிடம் இல்லை. அதஞல் அவர்கள் வீடு பெற முடியவில்லை.

ஆளுல் வேதம் ஓதி வேள்வி புரிந்து இறைவனகிய மெய்ப்பொருளை உணர்ந்து அன்பு செய்து மனம் தூய்மை யான வேதியர்களுக்கு அவன் வீடுபேருய் நிற்பான். முடிந்த முடிபாக அடையவேண்டிய பொருள் அவனே என்பதை நன்கு உணர்ந்து தெளிந்து பக்திநெறியிலே நிற்பவர்கள் அவர்கள்.

மாதீர்த்த வேதியர்க்கும்

வீடுபேருய் நின்றன.

வானத்தில் பதவிகளை வகிக்கும் தேவர்கள் மக்கள் தம்மை வணங்கி நலம் பெறுவதைல் தாமே உயர்ந்தவர்கள் என்றும் தம்மினும் சிறந்த பொருள் யாது ஒன்றும் இல்லையென்றும் எண்ணி இறுமாந்திருப்பார்கள். ஆனல் அவர்களுக்கு இடுக் கண் வரும்போது, தம் வலிமையின்மையை உணர்வார்கள். அசுரர்களின் கை ஓங்கித் தேவர்கள் நலியும்போது அந்தத் தேவர்களுக்குத் தாம் எல்லாம் வல்லவர்கள் என்று எண்ணிய எண்ணம் தவறு என்பது புலனுகும். அப்போது தம்மினும் பெரிய பரம்பொருளாகிய இறைவனிடம் ஓடிவந்து ஓலமிடு வார்கள். இறைவன் அவர்களுக்கு அபயம் தந்து அவர்களுக்கு வந்த இடுக்கண்களை நீக்குவான். அப்போதுதான் இறைவன் ஒருவனே இடும்பைகளினின்றும் தம்மை விடுவிப்பவன் என்ற