பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைவிட முடியுமா? 51

நிற்கும். அவ்வாறே அப்பருடைய உடம்பு எத்தொழிலைச் செய் தாலும் எவ்விடத்தில் இருந்தாலும் எந்தக் காலமாக இருந் தாலும் அவருடைய உள்ளத்தில் இறைவனுடைய நினைவு நீங்காமல் நின்றது.

பண்பொருத்தும் இசையிலே சுருதி என்றும் நில்லாமல் தொடர்ந்து இசைக்க வேண்டும். வாய்ப்பாட்டுக்காரர் பாடி லுைம், பக்கவாத்தியக்காரர்கள் தனி ஆவர்த்தனம் வாசித் தாலும், யாவரும் சிறிது நேரம் சும்மா இருந்தாலும் அந்தச் சுருதி நில்லாமல் இசைத்துக் கொண்டே இருக்கும்.

திருநாவுக்கரசு நாயகிக்கு எத்தொழிலைச் செய்தாலும் ஏத வஸ்தைப்பட்டாலும் எவ்விடத்தும் எக்காலத்தும் இறையுணர் வாகிய சுருதி நிற்பதே இல்லை. அவள் கண்களை மூடி உறங் கும் பொழுதும் அது இடைவிடாமல் இருக்கும்.

என் கண் பொருந்தும் போதத்தும்

கைவிட கான் கடவேனே?

இறையுணர்வு ஒருவருக்கு உண்டாவது மிக அருமை. அது உண்டாகி வலிமை பெறப் பெற மற்ற உணர்வுகள் மெல்ல மெல்ல நழுவிவிடும். அந்த உணர்வே மீதுார்ந்து நிற்கும். அதன் முழுவலிமையையும் உடையவர்கள் பின்பு அதை விட நினைத்தாலும் விட முடியாது.

கெட்ட பழக்கம் உடையவர்கள்கூட இப்படித்தான் இருக் கிருர்கள். குடிக்கப் பழகிக் கொண்டவன் மனிதனுகையில்ை அவன் அதல்ை உண்டாகும் தீங்குகளை நன்கு உணர்கிருன். பழியும் பாவமும் வந்து சேர்வது அவனுக்குத் தெரிகிறது ஆகுலும் அந்தப் பழக்கம் அவனை இறுகப் பற்றிக்கொண்டு, அவன் விட நினைத்தாலும் விடுவதில்லை. நல்ல பழக்கமும் இப்படியே இருக்கும். உறங்கும் போதாவது இறைவனை