பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அப்பர் தேவார அமுது.

மறந்து உறங்கலாம் என்று நினைத்தாலும், இறையுணர்வில் ஊறியவர்களுக்கு அவ்வாறு செய்ய இயலாது.

'நற்ற வாஉனை நான்ம றக்கினும்

சொல்லும் நா நமச்சி வாயவே

என்ற சுந்தரர் திருவாக்கு இந்தப் பழக்கத்தின் வலிமையைக் காட்டுகிதது. நாவுக்கரசு நாயகிக்கு இது தெரிகிறது. "நான் உறங்கும்போதுகூட என் அப்பன விட்டுவிடும் வலிமை எனக்கு உண்டா?” என்கிருள். கடவேனே என்ற சொல் இந்த இயல்பை உணர்த்துகிறது. -

மண்பொருந்தி வாழ்பவர்க்கும்

மாதீர்த்த வேதியர்க்கும் விண்பொருந்து தேவர்க்கும்

வீடுபேருய் கின்ருனைப் பண்பொருந்த இசைபாடும்

பழனம்சேர் அப்பனைஎன் கண்பெருக்தும் போதத்தும்

கைவிடநான் கடவேகுே?

  • நிலவுலகத்தில் பொருந்தி வாழும் மக்களுக்கும் பெரிய துய்மையை உடைய வேதியர்களுக்கும் வானுலகத்திலே பொருந்தி வாழும் தேவர்களுக்கும் முறையே பாசத்தினின் றும் துன்பத்தினின்றும் விடுதலைபெற்று அடையும் இன்பப் பேற்றின் வடிவாக நிலைபெற்று நிற்கும் பெருமானும், பண்கள் பொருந்தப் பக்தர்கள் இசைப்பாடல்களைப் பாடி இறைவனை ஏத்தும் திருப்பழனம் என்னும் திருத்தலத்தை. அடைந்து நித்திய வாசம் செய்யும் பரமபிதாவுமாகிய சிவ பெருமானை அடியேன் கண்கள் பொருந்தி உறங்கும்போதும் விட்டுவிட்டு மறந்து நிற்க வலிமையுள்ளனவா?* -