பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைவிட முடியுமா? 53. (மண் - மண்ணுலகம். பொருந்தி-இணைந்து. Dr தீர்த்தம்

மிக்க புனிதம்; உள்ளத்தே உண்மையுணர்வாலும் புறத்தே

நீரில் மூழ்குவதாலும் பெற்ற தூய்மை. -

"புறந்துாய்மை நீரான் அமையும்; அகந்துாய்மை

வாய்மையால் காணப் படும்” +

என்றபடி இருவகைத் தூய்மையையும் பெற்றவர்களாதலின், "மாதீர்த்த வேதியர் என்ருர்,

நிலவுலகத்தில் வாழ்பவர்களுக்கும் வேதியர்களுக்கும் வீடு பேருகிய முத்தியாக இருப்பவன் இறைவன். தேவர்களுக்கு அவர்கள் அடையும் இன்னல்களினின்றும் விடுதலை பெறும் சரணுலயமாக இருப்பவன். வீடுபேறு என்பதற்கு விடுதலை பெறுதல் என்பது பொருள். உலக மக்கள் இறைவனை வழி பட்டு முத்தி அடைவார்கள். தேவர்கள் மக்களாகப் பிறந்து வழிபட்டுத்தான் அதை அடைய வேண்டும். ஆகவே அவர் களுக்குரிய வீடுபேருவது, அவர்கள் தம் இன்னல்களினின்றும் விடுபட்டு நிற்கும் நிலை. .

இசை-இசைப் பாடல். பண்ணும் பாடலும் பொருந்தி நிற்க, அன்பர்கள் ஆண்டவனைப் பாடுகிருர்கள்.

“பண்என்னும் பாடற் கியை பின்றேல்” என்று பாடுவார் திருவள்ளுவர்,

அத்தகைய திருப்பழனத்தில் இறைவன் திருவுள்ளம் உகந்து சேர்ந்து நித்திய வாசம் செய்கிருன். அவன் யாவர்க்கும் அப்பனுக இருப்பவன். ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு தந்தை இருப்பார். அவர்கள் உடம்புக்குத் தந்தைகள். இறைவனே உயிருக்கே தந்தையாக இருப்பவன். அவனைப் பரமபிதா என்று கூறுவார்கள்.

விழித்திருக்கும்பொழுது எண்ணியிருப்பது பெரிது அன்று. கண்களை மூடி உறக்கத்தில் ஆழும்போதும் உணர்வு மறவாமல்

தே-4 . -