பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 அகந்தையைப் போக்கும் திருவடி

இராவணன் தன்னுடைய விமானமாகிய தேர்மீது வானத்தில் பறந்து வந்தான். உலகெங்கும் சுற்றி வந்த அவ னுடைய தேர் திருக்கைலாயத்தின்மீது செல்லும் போது அதைக் கடந்து செல்ல முடியாமல் நின்றுவிட்டது. அப்போது தேரை ஓட்டிய பாகன், 'இந்தக் கைலாயத்தின்மீது, உன் தேர் செல்லாது. நீ எல்லா இடங்களிலும் பறந்து சென்ருய், ஏழுலகத்தையும் கடந்து செல்லும் அதி வீர பராக் கிரமம் உடையவன் நீ. என்ருலும் அந்த வீரம் இந்த இடத் தில் செல்லாது. உன்னுடைய வீரத்தை மற்ற இடங்களில் காட்டலாம். இங்கே அது பயன் தராது. அதை விட்டுவிடு. இதை உணராமல் நீ விரைந்து செல்ல எண்ணுவது முறை அன்று. எல்லா இடங்களையும்போல இதை நினைக்கக்கூடாது' என்று சொன்னன். -

இராவணன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தேர்ப்பாகனுக்கு உண்டான அறிவு அவனுக்கு உண்டாக வில்லை. அவனுடைய மிடுக்குத் தளரவில்லை. பாகனை அவன். கோபித்துக் கொண்டான். 'என் ஆணையின்படி செய்வது தானே உன் கடமை? இந்த இடமும் பிரபஞ்சத்தில் அடங் கினதுதானே? இதைக் கடந்து போகாமல் இருந்தால் என் பெருமை என்ன ஆகும்?' என்று கோபித்தான்.

முடுகிய தேர் செலாது கயிலாய மீது கருதேல்; உன் வீரம் ஒழி;ே

முடுகுவது அன்று தன்மம்; என கின்று

பாகன் மொழிவான கன்று முனியா

விடு விடு என்று சென்று விரைவுற்று.