பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகந்தையைப் போக்கும் திருவடி 57

தன் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத் தில் இராவணன் அந்த மலையின் அடியில் கை கொடுத்துத் தூக்க முயன்றபோது அது அசைந்தது. அதைக் கண்டு நடுங் கிய அம்பிகை ஒடிப்போய் இறைவனைத் தழுவிக்கொண்டாள். பொல்லாத அரக்கன் அகந்தையால் செய்த காரியம் அம்பி கையின் ஊடலைப் போக்க வழி செய்தது. அதற்காகவே இறைவன் இராவணன் செயலைத் தடுக்காமல் இருந்தான். பொல்லாதவர்களின் தீய செயல்களிலும் நல்லதைப் பெறு வார்கள், அருளுடைய பெரியோர்கள் என்ற உண்மை இதல்ை தெரிய வருகிறது. -

சிறிதளவு சும்மா இருந்த இறைவன், உமாதேவி அஞ்சி ஒடி வந்து தன்னை அணைத்துக் கொண்டவுடன் புன்முறுவல் பூத்தான். அம்பிகையின் ஊடல் தீர்ந்து விட்டது. இனி இராவணனுடைய அகந்தையைப் போக்க வேண்டும்.

தன் கால்விரல் ஒன்றைச் சிறிதே அழுத்தி ஊன்றின்ை எம்பெருமான். "இதோ, இந்த மலை அசைந்து எழும்புகிறது. இதைத் தூக்கி எறிந்து விடுவோம்’ என்ற தருக்கிளுேடு இருந்த இராவணன் கைகள் இருபதும் மலையின் அடியில் இருந்தன. எம்பெருமான் தன் கால் விரலால் அழுத்திய உடனே கைலைமலை மீண்டும் நிலத்தில் பதிந்து தன் பழைய நிலையை அடைந்தது. இதை இனி எடுத்து எறிதல் எளிது’ என்று எண்ணியிருந்த இராவணனுடைய கைகள் இருபதும் அதன்கீழே சிக்கிக்கொண்டன. மலையின் பாரம் அந்தக் கை களை நசுக்கின. தன் வலிமையை எல்லாம் கூட்டிக் கைகளே எடுக்கப் பார்த்தான். மலையை எடுக்காமல் போனலும் போகட்டும் என்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று.

அப்போது எப்படியாவது கைகளை விடுவித்துக் கொள்ள வேண்டுமென்று தன் தலைகளால் முட்டினன். தோள்களால் உந்தினன். அவைகளும் மலையின்கீழ் அகப்பட்டு நெரிந்தன; நெடுநெடுவென்று நசுங்கின. ஓ என்று ஓலமிட்டான் இரா வணன்; பிறகு இறைவனைப் பாடி விடுதலை பெற்ருன்.