பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

${} . அப்பர் தேவார அமுது

(கடுகிய-வானத்தில் வேகமாகச் சென்ற கடுகிய என் பது முதல் தன்மம் என்பது வரையில் உள்ளது தேர்ப்பாகனது

அறிவுரை.

‘கடுகிய தேர் கயிலாய மீது செலாது; (அவ்வாறு செய் யக்) கருதேல்; உன் வீரம் ஒழி; நீ முடுகுவது தன்மம் அன்று” என்று கூட்டுக. நன்று-கடுமையாக. முனியா-கோபித்து. விடுவிடு என்றது வேகத்தைக் குறிக்கும் குறிப்பு. விரைவுற். றுச் சென்று. நெடுநெடு என்றது ஒலிக்குறிப்பு. வீழும்படி யாக விரலைக் கொண்ட பாதம், ஒரு விரலே இந்தப் பெரிய செயலைச் செய்யுமெனின் இரண்டு திருவடிகளையும் பற்றிக் கொண்ட அடியேனே இந்திரியங்கள் என் செய்யும்? ஆணவம் என் செய்யும்? என்பது குறிப்பு.)

இறைவன் திருவடிகளைத் தியானம் செய்து பற்றிக் கொண்டவர்களுக்கு இந்திரியங்களாலும் ஆணவத்தாலும் தீங்கு வராது என்பது கருத்து.

இது நான்காம் திருமுறையில் பதின்ைகாம் பதிகத்தில் உள்ள பதினேராவது திருப்பாட்டு.