பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

è芝 அப்பர் தேவார அமுது எடுக்கிருேம். அதில் என்ன வைத்திருக்கிருேம் என்று நமக்கு நன்ருகத் தெரியும், ஆல்ை இந்த இதயம் நம்முடையதாக இருக்கும்போது இதன் நிறைகுறைகள் நமக்குத் தெரிவ தில்லை. நமக்கே உரிய இதயமாக இருந்தாலும் இதன் செயற்பாடுகளை அறியும் உணர்வு நமக்கு இருப்பதில்லை.

இனி, பொதுவாக எல்லாருக்கும் உரிய சிலவற்றைப் பார்க்கல்ாம். நாம் குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்கிருேம். அந்தக் காலமும் இடமும் நமக்கு நன்ரூகப் புலனுகின்றன. ஆணுல் அந்தக் காலம் எப்போது தோன்றிற்று? காலத்தின் முதல் நாள் எது? நமக்குத் தெரி கிறதா? தெரியவில்லை. நாம் வாழும் இடம் விரிந்த பிரபஞ்சத் தில் ஏதோ சிறிய புள்ளி போல இருக்கிறது. நமக்கு அந்த இடத்தின் பரப்பு முழுவதும் தெரிவதில்லை. இப்படி நம் உணர்வுக்கு அகப்படும் காலம், இடம் என்பனவற்றின் எல்லே யையே நாம் உணர முடிவதில்லை. நமக்கு உரிய இதயத்தின் இயல்பை உணர முடிவதில்லை. பல சமயங்களில் மருத்துவர் களின் சோதனைக்கும் அகப்படுவதில்லை. ஏதோ ஒன்று.இவற் றையெல்லாம் இயக்குகிறது என்பது மட்டும் தெரிகிறது. அந்த நியதியையே இயற்கைவென்று சிலர் சொல்கிருர்கள்.

இயற்கை என்றவுடன் எல்லாவற்றையும் இயக்கும் நியதியை மாத்திரமா நாம் எண்ணுகிருேம்? புல், பூண்டு, பறவை, விலங்கு, மனிதன் ஆகிய எல்லாச் சீவவர்க்கங்களும் அந்த நியதியின் வரம்புக்குள் இருந்து தொழிற்படுகின்றன.

எதை இயற்கையென்று சொல்கிருர்களோ, அதன் இயல்பை இன்னதுதான் என்று வரையறுத்துச் சொல்ல முடிவ தில்லை. இதுதான் இயற்கை, இப்படித்தான் நடைபெறும் என்று திட்டமாகச் சொல்ல முடிவதில்லை. மனிதன் பிறந்து வாழ்ந்து மூப்படைந்து இறப்பது இயற்கையென்று வைத்துக் கொள்வோம். ஆளுல் சில குழந்தைகள் செத்துப் பிறக்கின் றன; சில பிறந்தவுடன் இறக்கின்றன; சில காலம் வாழ்ந்து இறந்து விடுகின்றன. இவை யாவும் இயற்கையின் வேறு