பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 அப்பர் தேவார அமுது

அழிந்தாலும் அந்தப் பரம்பொருளாகிய சிவபெருமான் மறைவதில்லை, அழிவதில்லை. எல்லாம் அழிந்து போனுலும், தாம் அழியாமல் நிலைத்து நிற்கும் மெய்ப்பொருள் அவர்.

மெய்யர்.

இது யாருக்குத் தெரியும்? எது உண்மை என்று ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இது புலனுகும். உ ட ம் போ டு உலாவும் மனிதன் இறந்தால் அந்த உடம்பு அழிகிறது. இப்படியே ஒரு காலத்தில் பிரபஞ்சம் முழவதும் அழிந்து விடும். ஆனல் யாவும் அழிந்தாலும் தான் அழியாமல் நிற்பது அந்தப் பரம்பொருள்தான். உண்மையை ஆராயப் புகுந்து அந்த நெறியில் நின்றவர்களுக்கு இந்தக் கருத்துப் புலனுகும்.

மெய்யர் மெய்ங்கின்றவர்க்கு.

கண்ணுல் காணமுடியாவிட்டாலும் காற்றை நாம் உணர முடிகிறது. ஒலியைக் கேட்க முடிகிறது. ஒரு பொறிக்குத் தெரியாவிட்டாலும் மற்ருெரு பொறிக்குத் த ட் டு ப் ப டு ம் பொருள்கள் உண்டு. மணத்தைக் கண்ணுே காதோ உணர முடிவதில்லை, ஆல்ை நாசி உணர்கிறது. இவ்வாறே. பஞ்சேந்திரியங்களுக்கு அப்பாற்பட்டதை மனத்தால் நினைக்க முடிகிறது. மனத்தால் உணரமுடியாததை மெய்ஞ்ஞானத்தால் உணரமுடியும். மெய்ந்நெறியில் நின்று ஞானம் பெற்றவர். களுக்கு அந்தப் பரம்பொருளின் உண்மை புலகுைம்.

மெய்யர் மெய்ங்கின்றவர்க்கு.

மற்றவர்கள் இதை நம்புவதில்லை. கடலைப் பார்க்க காதவனுக்குக் கப்பல் கடலில் செல்லும் என்பது தெரியாது. பார்த்தவனுக்குத் .ெ த ரி யு ம். அவ்வாறு உண்மையை உணரப்புகும் ஆராய்ச்சியில் தலைப்பட்டு அந்தமெய்ந்நெறியில் நிலைபெற்று நின்றவர்க்குப் பரம்பொருள் சத்தியமானது என்ற,