பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 அப்பர் தேவார அமுது

சடை உடையவராக எழுந்தருளியிருக்கும் இறைவர் வடி வத்தில் மெய்ப்பொருளாகிய நித்தியமான கடவுளையே கண்ட

வர் அப்பர். ஆகவே அவர்,

மெய்யர் மெய்க்கின்றவர்க்கு; அல்லாதவர்க்கு என்றும் பொய்யர், புகலூர்ப் புரிசடையாரே

என்று பாடுகிருர், புரிசடையாராகத் தோற்றம் கொண்டு புகலூர் என்னும் தலத்தில் எழுந்தருளியிருப்பவர் எங்கும் நிறைந்த மெய்ப் பொருளே என்ற உணர்வு அவருக்கு உண் டாகி விடுகிறது. பானே நீரைக் குடிப்பவன் அது ஆற்று நீர் என்ற எண்ணம் கொள்வதைப் போன்ற உணர்வு அது.

செய்யர் வெண்ணுாலர், கருமான் மறிதுள்ளும்

கையர், கனைகழல் கட்டிய காலினர்,

மெய்யர் மெய்ங்கின்றவர்க்கு; அல்லாதவர்க்கு என்றும் பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே.

  • திருப்புகலூரில் புரிந்த சடையுடன் கோலங்காட்டி எழுந் தருளியிருக்கும் சிவபெருமான், செம்மேனி உடையவர்; வெண் மையான முப்புரி நூலே அணிந்தவர்; கரிய மான் குட்டி துள்ளும் திருக்கரத்தை உடையவர்; ஒலிக்கின்ற வீரக்கழலைக் கட்டிய திருவடியை உடையவர்; மெய்யை ஆராய்ந்து செல்லும் நெறியில் நின்றவர்க்கு மெய்ப்பொருளாக இருப் பவர்; அவ்வாறு இல்லாமல் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றுள்ளவர்களுக்கு என்றும் அறியப்படாத மெய்ப்பொருளாக இருப்பவர்."

(செய்யர் : இறைவர் செம்பவளத் திருமேனியுடையவர்; 'சிவனெ னும்பெயர் தனக்கே உரியசெம் மேனியெம்மான்” என்பது தேவாரம். சிவபெருமான அந்தணன் என்று சொல்வ தல்ை அதற்குரிய அடையாளமாகிய வெண்மையான முப்புரி நூலை அணிந்திருக்கிருர்,