பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மன ஆலயம்,

திருவாரூர்த் திருக்கோயிலில் அரநெறி என்று தனியே ஒரு சந்நிதி உண்டு. திருவாரூர் அரநெறி என்று அதைச் சொல்வார்கள். அப்பர் சுவாமிகள் அந்தச் சந்நிதி சென்று தரிசனம் செய்தார். சிவ பெருமான் பல தலங்களில் எழுந்: தருளியுள்ளார். என்ருலும் அவருக்கு உகந்த சிறத்த ஆலயம் ஒன்று உண்டு. அது இன்ன தென்று சொல்ல வருகிருர் திரு. நாவுக்கரசர். - - -

ஆருர் அரநெறியாரை அடையாளம் காட்டுகிருர் அப்பர் சுவாமிகள். அவரை அணுகும் போதே அவர் திருமுடியின் மேல் அணிந்துள்ள பிறை அவரை இனம் கண்டு கொள்ளச் செய்கிறது. அது வெள்ளை வெளேரென்று பால் போன்ற நிலாவை வீசுகிறது. அதையே அவர் குறுங்கண்ணியைப் போல் திருமுடிமேல் அணிந்திருக்கிருர். கண்ணி யென்பது அரசர்களும் தலைவர்களும் அடையாளமாகச் சூடும் சிறு மாலை. இறைவர் குளிர்ந்த வெள்ளைப் பிறையையே கண்ணியாகப் புனைந்துள்ளார்.

மார்பில் அணிவது மாலை. இறைவர் கொன்றை மாலையை அணிந்திருக்கிருர். அது பொன்னிறமாகிய பசுமஞ்சள் நிறத் தோடு ஒளிர்கிறது. இந்த அடையாளத்தை முதலில் சொல்கிருர்.

பாலை நகு பணி வெண்மதி பைங்கொன்றை மாலையும் கண்ணியும் ஆவன.

(பாலைப் போல விளங்கும் குளிர்ச்சியையுடைய வெள்ளைப் பிறையும் மஞ்சள் நிறம் பெற்ற கொன்றையும் கண்ணியா கவும் மாலையாகவும் அவருக்கு ஆவன.

~,