பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

熊2。 அஞ்சுடராய் நின்ருன்

இறைவனே எண்ணி வாழும் அன்பர்கள் உடம்பாலும் உள்ளத்தாலும் தூயவர்களாக இருப்பார்கள். அவர்கள் நெஞ்சில் வஞ்சனை என்பது சிறிதும் இராது. உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசும் வஞ்சனையுள்ளவர்கள் தொழுதால் அவர்களுக்கு இறைவன் தன் உருவத்தைக் காட்டமாட்டான்; அவர்கள் எவ்வளவு தவம் செய்தாலும் தலதரிசனம் செய்து வழிபட்டாலும் மக்களை வஞ்சிக்கும் எண்ணம் உள்ளவரைக்கும் அவர்களை அணுக மாட்டான்.

வஞ்சனையார் ஆர்பாடும் சாராத மைந்தன.

(மைந்தன்-வலிமை உடையவன்.)

இப்படிச் சொன்னதனுல், வஞ்சனை இல்லாத தூய நெஞ் சுடைய அன்பர்களிடத்தில் அவன் சார்ந்து அருள் புரிவான் என்பது தெளிவாகிறது. "உள்ளொன்று வைத்துப் புறம்பு ஒன்று பேசுவார் உறவுகல வாமை வேண்டும்” என்று அருட் பிரகாச வள்ளலார் வேண்டுவார்.

அந்தப் பெருமான் யாவரும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நள்ளிரவில் நடனம் புரிவான். உயிர்களெல்லாம் அமைதி யோடு உறங்கும் இருளில் அவன் உறங்காமல் களிக்கூத்தாடு வான். தன் மனத்தே அவனை வைத்துத் தியானம் செய்யும் மெய்யன்பர்கள் இரவிலும் உறங்காமல் விழித்திருப்பார்கள். தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்று தவம் செய்யும் முறையைக் கூறுவார்கள். பெரிய குடும்பத்தில் உள்ள ஒரு பெண் எல்லா வேலைகளையும் செய்துவிட்டு, யாவரும் உறங்கும் வேளையில் தன் கணவனை நாடிச் சென்று அணைந்து இன்புறுவது போல, தவம் செய்யும் யோகியர்கள்