பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அப்பர் தேவார அமுது

விழித்திருந்து நள்ளிரவில் அவனுடைய தரிசனத்தைப் பெறு வார்கள். அப்போது ஆடல் உகந்த பெருமானுடைய காட்சி அவர்களுக்குக் கிடைக்கும்.

துஞ்சு இருளில் ஆடல் உகந்தானே.

அவனுடைய தொண்டர்கள் எப்போதும் அவனை எண்ணு வார்கள். இருந்தாலும் அவர்கள் உள்ளத்திலும் சில சமயங் களில் வாசஞ மலத்தால் மயக்கம் உண்டாகும்; அறியாமை என்னும் இருள் தலைநீட்டும். அப்போது இறைவன் அவர் களுக்கு அருள் செய்ய முந்துவான்; தண்ணிய நிலவொளியை வீசச் செய்வான்; அவன் திருமுடியில் உள்ள நிலாவின் ஒளி அந்தத் தொண்டர்களின் உள்ளத்தே ஒளிரச் செய்வான்.

தன் தொண்டர் நெஞ்சு இருள் கூரும்பொழுது கிலாப் பாரித்து.

எப்போதும் அவனையே நினைத்து, அவனுடைய சுடர் வண்ணத் திருமேனியையே தியானித்து நெஞ்சில் ஒளி படர நிற்பவர்கள் தொண்டர்கள். எப்படியாவது இவர்களைத் தன் மாய வலையில் அகப்படுத்த வேண்டும் என்று அஞ்ஞானம் வந்து சூழும். அதற்குக் கொஞ்சம் இடம் கொடுத்தால் போதும்; அது உடனே உள்ளே புகுந்து விடும். நம்முடைய மனத்தில் அறியாமையே குடிபுகுந்து அரசாட்சி செய்கிறது. அன்பர்கள் நெஞ்சில் அது குடிபுக முடியாமல் திணறி நிற்கும். சற்றே அன்பர்கள் சோர்வாக இருந்தால் அந்தச் சமயம் பார்த்து அது உள்ளே புகுந்து விடும்.

அப்பொழுது தன் தொண்டர்களைப் பாதுகாக்க முன்வரு வான் இறைவன்; தண்ணிய நிலவொளி வீசும்படி செய்வான்; தன் உருவத்தைக் காட்டத் தொடங்கி அதற்கு அடையாள மாக நிலாவைப் பாரிக்கச் செய்வான்; பிறகு தானே அழகிய சுடராக உள்ளே புகுந்து நிற்பான். சூரியன் வானத்திலே