பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சுடராய் நின்ருன் 77.

தோன்றுவதற்கு முன் அருணுேதயம் ஆவது போல முதலில் நிலா ஒளியைக் காட்டுவான்; பிறகு கதிரவன் தோன்றுவது போலத் தானே அழகிய சுடராய் வந்து நிலையாக நிற்பான். அவனுடைய கருணை அது.

தாகம் தணியத் தண்ணீர் கொடுத்துப் பிறகு பசி தீர உணவளிப்பது போலே, தன் தொண்டர் நெஞ்சில் இருள் படரும்பொழுது முதலில் நிலா ஒளியைக் காட்டி அப்பால் செஞ்சுடர்ச் சோதியாக எழுந்தருளி வந்து நிற்பான்.

இத்தகைய இயல்புடைய பெருமானை அப்பர் சுவாமிகள் திருவாரூரில் தரிசித்தார்.

நிலாப் பாரித்து அஞ்சுடராய் கின்ருனை கான் கண்டது ஆருரே.

அஞ்ஞானம் என்னும் இருளை நீக்கி மெய்ஞ்ஞானம் என்னும் ஒளியைப் புகுத்திப் பின் தேஜோமய விக்கிரகமாக அன்பர்கள் உள்ளத்தில் நின்று அருளாட்சி செய்கிறவன் சிவ பெருமான். இதை அப்பர் சுவாமிகள் பாடுகிருர்.

வஞ்சனையார் ஆர்பாடும் கில்லாத மைந்தனைத் துஞ்சிருளில் ஆடல் உகந்தானத் தன்தொண்டர் கெஞ்சுஇருள் கூரும் பொழுது கிலாப்பாரித்து அஞ்சுடராய் கின்ருனே நான்கண்டது ஆருரே.

  • உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் வஞ்சனை நெஞ்ச முடையவர் எவ்வகையில் வல்லவராக இருந்தாலும் அவர்கள் யாரிடத்தும் நில்லாமல் உள்ள அருள் வலிமை பெற்ற பெருமானும், யாவரும் உறங்கும் நள்ளிருளில் நடனம் செய்தலை மனம் உகந்து மேற்கொண்டவனும், தன்னுடைய தொண்டர்களின் நெஞ்சில் அஞ்ஞானம் என்னும் இருள் மிகுதி யாகும் பொழுது அங்கே தண்ணிய நிலாவொளியைப் பரப்பிப் பிறகு அழகிய சுடர்வடிவமாகக் கோலம் காட்டி